Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Arzooo Funding: பெங்களூரை சேர்ந்த பி2பி ரீடெய்ல் டெக்னாலஜி  புதுசா ஃபண்ட் (Fund) ரைஸ் பண்ணிருக்காங்க.. எதுல தெரியுமா?

Nandhinipriya Ganeshan June 29, 2022 & 16:00 [IST]
Arzooo Funding: பெங்களூரை சேர்ந்த பி2பி ரீடெய்ல் டெக்னாலஜி  புதுசா ஃபண்ட் (Fund) ரைஸ் பண்ணிருக்காங்க.. எதுல தெரியுமா?Representative Image.

Arzooo Funding: பெங்களூரை சேர்ந்த பி2பி ரீடெய்ல் டெக்னாலஜி தளமான ஆர்ஸூ (Arzooo), ஜப்பானை சேர்ந்த எஸ்பிஐ இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் ட்ரிஃபெக்டா லீடர்ஸ் ஃபண்டிலிருந்து அதன் சீரிஸ் B நிதிச் சுற்றில் 70 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியுள்ளது. மேலும், செலஸ்டா கேபிடல் மற்றும் 3 லைன்ஸ் விசி உள்ளிட்ட தற்போதைய முதலீட்டாளர்களும் இந்த சுற்றில் பங்கேற்றனர்.

அதுமட்டுமல்லாமல், இந்த புதிய ரவுண்டில், அமெரிக்க உணவு விநியோக நிறுவனமான தூர்டாஷின் நிறுவனர் டோனி சூவும் பங்கேற்றார். இந்தியாவில் சூவின் முதல் முதலீடு இதுவாகும். 

2018 ஆம் ஆண்டு பிளிப்கார்ட்டின் முன்னாள் நிர்வாகிகளான குஷ்னுத் கான் மற்றும் ரிஷி ராஜ் ரத்தோர் (arzooo founders)ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த ஸ்டார்ட்அப் சில்லறை வணிகர்கள் தங்கள் ஆன்லைன் வணிகத்தை திறம்படச் செய்யவும், விற்பனையை அதிகரிக்கவும் உதவும் சில்லறை தொழில்நுட்ப தளத்தை நிர்வகித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் சில்லறை விற்பனையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு எதிராக சில்லறை விற்பனையாளர்கள் வளர Arzooo உதவி செய்து வருகிறது. 

இதுவரை இந்தியாவின் 22 மாநிலங்களில் இயங்கி வரும் 30,000 ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு உதவியுள்ளது. Trifecta Capital, UAE-ஐ சேர்ந்த Jabbar Internet Group, Celesta Capital, WRVI Capital, Silicon Valley's VC Bill Tai, 3 Lines VC, Zoom's Eric Yuan ஆகியோர் ஆர்ஹூ -இன் முதலீட்டாளர்கள் ஆவார். 

 

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்