India's 102 Unicorn: மும்பையை சேர்ந்த ஆன்லைன் அழகுசாதன சில்லறை விற்பனையாளர் பர்பில், சவுத் கொரியன் VC பராமார்க் வென்ச்சர்ஸ் தலைமையில் தற்போதுள்ள ஆதரவாளர்களான ப்ளூம் வென்ச்சர்ஸ், கேதாரா மற்றும் அசிம் பிரேம்ஜியின் பிரேம்ஜி இன்வெஸ்ட் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 33 மில்லியன் டாலர்கள் திரட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 102 வது யூனிகார்ன் ஆக மாறியுள்ளது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1.1 பில்லியன் டாலர்களாகும்.
இதேபோல், எட்டெக் ஸ்டார்ட்அப் ஆன பிசிக்ஸ் வாலா தனது முதல் நிதி சுற்றில் 100 மில்லியன் டாலர்களை திரட்டி இந்தியாவின் 101 வது யூனிகார்னாக உருவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே வாரத்தில் 2 யூனிகார்ன்
எட்டெக் துறையின் பொருளாதார நெருக்கடியால், பல யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வெளியேற்றி வருகின்றன. இதற்கிடையில், இந்த வாரம் மட்டும் இந்த இரண்டு நிறுவனங்களும் யூனிகார்ன் கிளப்பில் நுளைந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளன.
பர்பில்
2012 ஆம் ஆண்டு மனிஷ் தனேஜா மற்றும் ராகுல் தாஸ் ஆகியோரால் நிறுவப்பட்ட பர்பில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட பிராண்டுகள் மற்றும் 60,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மற்றும் 5 தனியார் டிடிசி பிராண்டுகளுடன் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அழகு சார்ந்த பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் இந்நிறுவனம் 7 மில்லியன் பயனர்களை கொண்டிருப்பதாகவும் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 101வது யூனிகார்னாக மாறிய யூடியூப் சேனல்... யூடியூம் சேனல் டூ எட்டெக் யூனிகார்ன்...!!
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…