Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for Startups

Gowthami Subramani Updated:
2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for StartupsRepresentative Image.

ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டின் முடிவின் நிலை பற்றி தெரிந்து கொள்வதில் சுவாரசியம் இருக்கும். அதன் படி, ஸ்டார்ட் அப் வரிசையில் பார்க்கும் போது, புதிய தொழில்முனைவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் உள்ள ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் பற்றிய புத்தகங்கள், தொழில்முனைவோர்களின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ்வாறு தொழில்முனைவோர்கள் தொழில் உருவாக்குவதற்கான உயர்வு மற்றும் தாழ்வு குறித்து கூறப்படும் டாப் 10 புத்தகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for StartupsRepresentative Image

The Dolphin and The Shark: Stories on Entrepreneurship

ஷார்க் டேங்க் இந்தியா என்ற நிகழ்ச்சியின் பிரபலமான Namita Thapar அவரது வணிக பயணத்தை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அவர், ஒவ்வொரு நிறுவனருக்கும் ஏன் ஒரு வழிகாட்டி தேவை என்றும், நிதியமைப்பின் நான்கு முக்கிய காரணிகளாக விளங்கும் நிறுவனர், நிதி, அடித்தளம் மற்றும் பொருத்தம் குறித்து கூறியுள்ளார்.

இது தொழில் தொடக்க முனைவோர்களுக்கு அவர்கள் சந்திக்கும் வணிக பயணத்திற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.

2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for StartupsRepresentative Image

The Dream Founder: Creating a Successful Startup

Angel Investor, Lead Angels இயக்குநர் மற்றும் Management Development Institute-ல் Professor ஆக இருப்பவர் துருவ் நாத்.

இவர் எழுதிய The Dream Founder: Creating a Successful Startup புத்தகத்தில் தொடக்க நிலையில் உள்ள நிறுவனர்கள் அறிவுரை கூறியுள்ளார். மேலும் இவர், Unit economics, Marketing Communication, மற்றும் எப்படி நிதி திரட்டுவது மற்றும் அதன் அடிப்படையில் குறித்த தெளிவான விஷயத்தை எடுத்துரைத்துள்ளார்.

இதில், வெற்றிப்பாதையில் செல்லும் தொழில்முனைவோர்களுடன் நடந்த உரையாடலும் இடம் பெற்றிருக்கும். இதில் அவர்களது நீண்ட பயணங்களில் இருந்து அனுபவித்த பாடங்களைப் பகிர்ந்து உள்ளனர்.

2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for StartupsRepresentative Image

Winning Middle India: The Story of India’s New-Age Entrepreneurs

இந்தியாவின் புதிய தொழில்முனைவோர்களைப் பற்றி பேசப்படும் இந்த புத்தகத்தை பாலா ஸ்ரீனிவாசா மற்றும் ஹரி என்பவர்கள் எழுதியுள்ளனர். இதில் தொழில்முனைவோர்களின் வெற்றிக் கதைகளை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இதில் இந்தியாவில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்சம் முதல் 20 லட்சம் வரை வாங்குபவர்களின் நிலையை எடுத்துக் கூறுவதாக அமைகிறது. மேலும், இதில் கொரோனா தாக்கத்தினால் சிறு நிறுவனங்களில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் இந்தியாவில் இளம் இளைஞர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கூறியுள்ளனர்.

2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for StartupsRepresentative Image

The Maverick Effect: The Inside Story of India’s IT Revolution

இந்த புத்தகத்தில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் கதை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 1980 முதல், இன்று நாம் கண்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சி வரை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் வரலாறு பல தசாப்தங்களாக பரவியுள்ளது.

இந்த புத்தகத்தை எழுதியவர் நாஸ்காமின் நிறுவன உறுப்பினர் மற்றும் முதல் தலைவராக விளங்கும் ஹரிஷ் மேத்தா ஆவர். இதில் அவர், இந்தியாவின் ஐடி ஏற்றம் குறித்த விளக்கங்களையும் அளித்துள்ளார்.

2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for StartupsRepresentative Image

The Lean Startup

Eric Ries எழுதிய The Lean Startup புத்தகமானது புதிய ஐடியாக்களை கொண்டு வணிகத்தை மேம்படுத்துவதற்கான கருத்துக்களை கூறும் புத்தகமாகும்.

இந்தப் புத்தகமானது அதிகபட்ச நேரம் மற்றும் பணம் உபயோகிப்பதை எடுத்துக் கூறும் வகையில் அமைகிறது. மேலும், இதில் தொழில் முனைவோர்கள் தேவையில்லான விளைவுகளைத் தவிர்த்துக் கொள்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for StartupsRepresentative Image

How to Win Friends and Influence People

Dale Carnegie எழுதிய இந்தப் புத்தகமானது, தொழில்முனைவோர்களின் வெற்றிக்கு வழி வகுப்பனவற்றைக் குறிப்பிடுவதற்கு உதவுகிறது.

இதில், தொழில்முனைவோர் வணிகத்தை மேம்படுத்த வணிக உளவியல் கருத்துக்களைக் கொண்ட புத்தகமாக விளங்குகிறது.

2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for StartupsRepresentative Image

How Creativity Rules the World: The Art and Business of Turning Your Ideas into Gold

Maria Brito எழுதிய இந்த புத்தகமானது, ஐடியாக்கள் அல்லது யோசனைகளை மதிப்புமிக்கதாக மாற்றுவதற்கான வணிகம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்கிறது.

மேலும், படைப்பாற்றலானது உலகை எவ்வாறு ஆளுகிறது என்பதை எடுத்துக்கூறும் வகையிலும் இந்தப் புத்தகம் உள்ளது. இதில் உள்ள வரலாற்றுப் படங்கள், நவீன கதைகள் மூலம், தொழில்முனைவோர் தங்களின் செயல்முறையை ஆராய்ந்து மேன்மை படுத்துவதற்கான வழியை உருவாக்கலாம்.

2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for StartupsRepresentative Image

The Art of Management: Managing Yourself, Managing Your Team, Managing Your Business

இந்தப் புத்தகத்தை எழுதிய ஷிவ் சிவக்குமார் என்பவர், ஆதித்ய பிர்லா குரூப் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார். இந்த புத்தகத்தில் தலைப்பில் கொடுக்கப்பட்டது போலவே, தொழில்முனைவோர் அவர்களை நிர்வகிப்பது, அவர்களது குழுவை நிர்வகிப்பது, அவர்களது வணிகத்தை நிர்வகிப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். இது ஷிவ் சிவகுமார் என்பவரால் எழுதப்பட்டது.

கொரோனா தொற்று நோயால், நிறைய பேருக்கு வேலை இழப்பு, நிறுவனங்கள் தோல்வியைச் சந்தித்தல் போன்றவற்றில் எப்படி சமநிலையில் நிர்வாகம் செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இவர், நேரத்தை நிர்வகிப்பது மட்டுமல்லாமல், லட்சியங்கள், கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றையும் எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் கூறியிருக்கிறார்.

2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for StartupsRepresentative Image

Build the Damn Thing: How to Start a Successful Business If You’re Not a Rich White Guy

இந்தப் புத்தகத்தில், ஜூனியஸ் கில்டின் நிர்வாகத்தின் பொதுப் பங்குதாரரான கேத்ரின் ஃபின்னி, பின் தங்கிய மற்றும் விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்த தொழில் முனைவோர் எவ்வாறு தலைமையில்லாமல் நிறுவனத்தை நிர்வகிக்க முடியும் என்பது குறித்த நுண்ணறிவைப் பகிர்ந்துள்ளார்.

வெற்றிகரமான நிர்வாகத்தை உருவாக்குவதற்கு, தொடக்கத்தை உருவாக்குவதில் இருந்து வரக்கூடிய சவால்களை சமாளிப்பவராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for StartupsRepresentative Image

See, Solve, Scale: How Anyone Can Turn an Unsolved Problem into a Breakthrough Success

இந்த புத்தகத்தில், டேனி வார்ஷா என்பவர் தொழில்முனைவோர் கற்றலின் மூலம், எப்படி பிரச்சனைகளை சமாளிப்பது குறித்து குறிப்பிடுகிறார்.

இதில் முக்கியமாக குறிப்பிடுவது, சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்பதைக் கண்டறிய பார்ப்பதற்கும், அதனை செயல்படுத்துவதற்கு அதற்கான தீர்வு மற்றும் எடுக்கப்பட்ட தீர்வு நீண்ட காலத்திற்கு அளவிடுதல் போன்றவற்றைக் குறிக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்