Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Booozie Startup: வீட்டுக்கே வரும் சரக்கு டெலிவிரி..! கொண்டாத்தில் மதுபிரியர்கள்... ! இது நல்ல பிசினஸ் ஐடியாவா இருக்கே... !

Manoj Krishnamoorthi June 03, 2022 & 17:05 [IST]
Booozie Startup: வீட்டுக்கே வரும் சரக்கு டெலிவிரி..! கொண்டாத்தில் மதுபிரியர்கள்... ! இது நல்ல பிசினஸ் ஐடியாவா இருக்கே... !Representative Image.

நம் உலகம் செல்லும் நவநாகரீக ஓட்டத்தில் பல்வேறு புதிய தொழில்கள் தோன்றுகின்றன, அதில் ஒரு சுவாரஸ்யமான பிசினிஸ் ஐடியா நடைமுறையாக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டு வந்திருப்பது பற்றி அறிய வேண்டுமா..!

ஆமாம்...! அப்படி என்ன சுவாரஸ்யமான பிசினஸ் என்ற ஆவலா அதைப் பற்றி அறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.அ

Booozie Startup:

இணையத்தளத்தில் வாழும் நம் தலைமுறைக்கு டெலிவிரி பிசினஸ் ஒன்று புதியதல்ல ஏற்கனவே சுவிக்கி, சும்மேட்டோ நிறுவனங்களின் மூலம் உணவுகளை ஆடர் செய்து பெற்று  சாப்பிட்டு மகிழ்கிறோம். இதுவரை வாடிக்கையாளர் ஆடர் செய்யும் உணவுகளை அவர்களுக்கு வீடு தேடி சென்று டெலிவிரி செய்யும் நிறுவனம் பல தற்போது உள்ளன. 

என்றாவது நாம் சிந்தித்து இருப்போமா..! உணவை ஆடர் செய்து வீட்டில் பெறுவதுபோல மதுபானங்களையும் வீடு தேடி வந்து டெலிவிரி செய்யும் யோசனை. ஆனால், இந்த சேவை பல மதுபிரியர்களுக்கு வந்திருக்கும், இல்லை சில சமயம் வேடிக்கையாக நம்மில் பலர் பேசியிருப்போம். இன்னும் கூட சொல்லப்போனால் சில சினிமாவில் நகைச்சுவையாக இந்த ஐடியா திரையில் ஓடியிருக்கும்..

இவ்வாறு வேடிக்கையாகப் பார்த்து பேசிய ஒரு விசயத்தை தற்போது  ஹைதராபாத் சேர்ந்த நிறுவனம் ஒன்று  கையில் எடுத்துள்ளது. அதுதான் ஆடர் செய்த 10 நிமிடத்தில் மதுபானம் டெலிவிரி சேவை ஆகும்.

Liquor Delivery Service: 

ஹைதராபாத் நகரத்தைச் சேர்ந்த இன்னோவென்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின்  மதுபானங்களை 10 நிமிடத்தில் ஆடர் செய்த நபரிடம் சேர்ப்போம் என வாக்குறுதுயுடன் ஆராம்பித்துள்ளது. இதுவரை பல நிறுவனங்கள் இந்த ஐடியாவில் சேவையைத் தொடங்க நினைக்கையில் Booozie மட்டுமே 10 நிமிடத்தில் டெலிவிரி செய்யும் நாட்டின் முதல் இணைய வழி மதுபான சேவை மையமாக உள்ளது என்பது குறிப்பிடவேண்டியதாகும்.

மேற்கு வங்க மாநில கலால் துறையின் ஒப்புதலுக்கு பிறகு கிழக்கு பெருநகரில் இந்த ஆன்லைன் மதுபான டெலிவிரி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக Booozie நிறுவனம் கூறியுள்ளது.  

முதல்கட்டமாகக் கொல்கத்தாவில் தொடங்கியுள்ள இந்த ஆன்லைன் மதுபான விநியோகமான Booozie, இரண்டு மாதத்தில் ஜார்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும்  அறிமுகமாகும் என Booozie நிறுவனத்தின் CEO விவேகானந்த பலிஜேபள்ளி கூறியுள்ளார்.   

அதே வேளையில் சென்னை, பெங்களூரு,  ஹைதராபாத் மற்றும் டெல்லி போன்ற நகரங்கள்   இந்த ஆன்லைன் மதுபான டெலிவிரி சேவைக்கு ஆதரவாக  இல்லாததும், 81% நுகர்வோர் இந்த ஹோம் டெலிவிரி சேவையில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்