Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
0.00sensex(0.00%)
நிஃப்டி21,995.85
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

திடீரென 173 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பைஜூஸ்.. அரசு அதிரடி.. கேரளாவில் பரபரப்பு..

Nandhinipriya Ganeshan October 27, 2022 & 12:24 [IST]
திடீரென 173 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பைஜூஸ்.. அரசு அதிரடி.. கேரளாவில் பரபரப்பு..Representative Image.

கேரளா: திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோ பார்க் வளாகத்தில் நூற்றுக்கணக்கான மென்பொரு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான பைஜூஸ் நிறுவனத்தின் கிளையில் இருந்து ஒரேநாளில் 173 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஐடி நிறுவன பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், வேலையை இழந்த ஊழியர்கள் தொழிலாளர் நலத்துறை மந்திரி வி.சிவன்குட்டியை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில், பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திருவனந்தபுரத்தில் இருந்து தனது செயல்பாடுகளை நிறுத்த பைஜூஸ் திட்டமிட்டுள்ளது என்று டெக்னோபார்க்கில் உள்ள ஐடி ஊழியர்களின் நல அமைப்பு தெரிவித்துள்ளது.  

அதாவது பைஜூஸ் நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.232 கோடி நஷ்டத்தை அடைந்தது. அதேபோல், ஒரு வருடத்திற்கு பிறகு நஷ்டம் ரூ.4588 கோடியாக உயர்ந்துள்ளது. இதனாலையே ஒரேநாளில் 173 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், எந்தவிதமான தொழிலாளர் சட்டத்தையும் பின்பற்றாமல் பைஜூஸ் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக வேலையை இழந்த அந்நிறுவன ஊழியர்கள் சிவன்குட்டியிடம் புகார் அளித்துள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Byjus layoffs 2022 in kerala, byju's news, kerala news in tamil, startup news tamil, startup news in tamil, layoffs in india, பைஜூஸ், 173 ஊழியர்கள் பணிநீக்கம், கேரள அரசு அதிரடி, 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்