Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

Byju's Layoff News: இந்த துறையில வேலைக்கு சேர்ந்தது ஒரு குத்தமா? ஸ்டார்ட்அப் ஊழியர்கள் கண்ணீர்...

Nandhinipriya Ganeshan June 29, 2022 & 09:15 [IST]
Byju's Layoff News: இந்த துறையில வேலைக்கு சேர்ந்தது ஒரு குத்தமா? ஸ்டார்ட்அப் ஊழியர்கள் கண்ணீர்...Representative Image.

Byju's Layoff News: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பிசினஸ்-டு-பிசினஸ் ஈகாமர்ஸ் நிறுவனமான உடான் (Udaan), பொருளாதார நெருக்கடியால் செலவுகளை குறைக்க சுமார் 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த செய்தி சமூக ஊடங்களில் காட்டு தீ போய் பரவிக் கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு பிரபல எட்டெக் நிறுவனத்தின் பணிநீக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல எட்டெக் ஸ்டார்ட்அப்பான பைஜூஸ் -க்கு சொந்தமான வைட்ஹாட் ஜூனியர் (WhiteHat Jr), செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் சுமார் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்களது அலுவலக மடிக்கணினிகள் மற்றும் ஐடி கார்டுகளை அதே நாளில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த பணிநீக்கம் 300 லிருந்து 600 ஆக உயரலாம் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்த வருடம் ஒருபக்கம் பெரும் மகிழ்ச்சியையும், மறுபக்கம் பெரும் கவலையையும் கொடுத்துள்ளது. அதாவது சமீபத்தில் தான் இந்தியா 103 யூனிகார்ன் ஸ்டார்ட்அப்களை பெற்று சாதனைப்படைத்தது. ஆனால், அதில் கிட்டத்தட்ட 9 நிறுவனங்கள் மட்டுமே நல்ல நிலையில் செயல்பட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் எட்டெக் துறையின் வருமானம் படுமோசமாக மாறியுள்ளது. ஏனென்றால் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி அனைத்து எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் நல்ல வருவாய் ஈட்டிவந்தனர். ஆனால், கொரோனா கட்டுப்பாடு நீங்கி மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் இந்த துறை நிறுவனங்களுக்கு வருவாய் ஈட்டுவதில் பெரும் சவாலாக இருந்தது. 

இதற்கிடையில், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இதனால், செலவுகளை சமாளிக்க முடியாமல் கொத்துக் கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்த துறை மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் இதே நிலைமை தான். 

layoffs in Startups: யூனிகார்ன் கம்பெனியே இப்படி பண்ணலாமா?

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்