Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

சொந்த மொழியில் தொழிற்கல்வி கற்றுத்தரும் சென்னை ஸ்டார்ட்அப்...

Nandhinipriya Ganeshan September 28, 2022 & 12:00 [IST]
சொந்த மொழியில் தொழிற்கல்வி கற்றுத்தரும் சென்னை ஸ்டார்ட்அப்...Representative Image.

பிரேம்குமார் ராமகிருஷ்ணன் என்பவரால் 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு விஷுவல் லேர்னிங் தளம் (Visual Learning Platform) Log2Base2. இந்த ஸ்டார்ட்அப் கடந்த திங்கட்கிழமை (செப்.26) விதைக்கு முந்தைய நிதிச்சுற்றில் (Pre-seed round) இருந்து 1.2 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. இது குறித்து பேசிய Log2Base2 இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரேம்குமார் ராமகிருஷ்ணன், பெறப்பட்ட நிதியானது முக்கியமாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தங்களது நிறுவனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சில புதிய யுக்திகளை அறிமுகப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 

Log2Base2 நிறுவனத்தில் புரோகிராமிங், டேட்டா கட்டமைப்புகள்(data structures), பைதான், அல்காரிதம்ஸ் மற்றும் பல விதமான படிப்புகள் அனிமேஷன் வீடியோக்கள் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கற்றுத்தரப்படுகிறது. இங்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைசெய்யும் நிபுணர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

சொந்த மொழியில் தொழிற்கல்வி கற்றுத்தரும் சென்னை ஸ்டார்ட்அப்...Representative Image

அதுமட்டுமல்லாமல், இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தற்போது hirefreshers.com எனப்படும் பணியமர்த்தல் தளத்தில் வேலை செய்து வருகிறது, இதைப் பயன்படுத்தி, நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் Log2Base2 குழுவில் இருந்து திறமையான நபர்களை நேரடியாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

மேலும், இந்த நிறுவனத்தில் தற்போது 3,58,169 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் மற்றும் 60 நாடுகளில் இருந்து 12,000 பணம் செலுத்தும் பயனர்கள் உள்ளனர். வருவாயை பொறுத்த வரையில், 81% இந்திய சந்தையில் இருந்தும், 11% வருவாய் அமெரிக்காவிலிருந்தும், மீதமுள்ள 8% மெக்சிகோ, சவுதி அரேபியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்தும் வருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்