சமீபத்தில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம்பிடித்த அதானி, தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலும் இடம்பிடித்து மாஸ் காட்டி வருகிறார். மின்சார உற்பத்தி, ரியல் எஸ்டேட், விமான நிலைய நிர்வாகம், டேட்டா சென்டர், துறைமுகங்கள், இயற்கை வளங்கள் மற்றும் பல துறைகளிலும் கால் பதித்துள்ள அதானி குழுமத்தில் தலைவரான 'கௌதம் அதானி' கடந்த சில மாதங்களாகவே அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார்.
அந்தவகையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில், 123.7 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் பழம்பெரும் முதலீட்டாளரான வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி அதானி 5 வது இடத்தை பிடித்திருந்தார். இந்த செய்தி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் உலகின் முன்னணி ஃபேஷன் பிராண்டான லூயி விட்டன் நிறுவனத்தின் சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி 137 பில்லியன் நிகர மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி 3வது பணக்காரராக இடம் பிடித்துள்ளார்.
முதல் இடம் - எலான் மஸ்க் (சுமார் $251 பில்லியன்)
இரண்டாம் இடம் - ஜெஃப் பெசோஸ் (சுமார் $153 பில்லியன்)
மூன்றாம் இடம் - கௌதம் அதானி (சுமார் $137 பில்லியன்)
இதையும் படிங்க:
உலகளவில் வெற்றிக்கொடி நாட்டிய தமிழ்நாட்டின் அசல் ஹீரோஸ்..
நம்ம ஊரு சின்ன வயசு பில்லியனர்ஸ்..
அமேசான் பண்ண இந்த வேலையால தான் ஃபிளிப்கார்ட்டே வந்துச்சி...
Tags:
world richest man 2022 list, gautam adani, gautam adani net worth, gautam adani net worth today
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…