Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Unicorn Companies in India: இந்தியா யூனிகார்ன் ஸ்டார்ட்அப்களின் வெற்றிப்பயணம்… 100 இந்திய யூனிகார்ன்களின் பட்டியல்…..

Nandhinipriya Ganeshan May 11, 2022 & 08:00 [IST]
Unicorn Companies in India: இந்தியா யூனிகார்ன் ஸ்டார்ட்அப்களின் வெற்றிப்பயணம்… 100 இந்திய யூனிகார்ன்களின் பட்டியல்…..Representative Image.

Unicorn Companies in India: தங்கள் கடின உழைப்பு மற்றும் போராட்டத்தால் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி, கிரீடத்தை அணிய முடிந்த இந்தியாவின் சிறந்த ஸ்டார்டஅப் நிறுவனத்தின் கதைகளைப் பற்றி பார்ப்போம். உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய ஸ்டார்ட்அப் மையங்களில் ஒன்றாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஸ்டார்ட்அப் வெற்றிக் கதைகளின் பட்டியலில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

ஒரு ஸ்டார்ட்அப்பை தொடங்குவதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்!!!

இருப்பினும், 90% ஸ்டார்ட்அப்கள் அவற்றின் ஆரம்ப நிலையிலேயே தோல்வியடைந்து விடுகின்றன. ET அறிக்கையின்படி, சுமார் 86% ஆண்கள் மற்றும் 14% பெண்கள் ஸ்டார்ட்அப் இடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு தொழிலதிபரும் தங்கள் ஸ்டார்ட்அப்பை வெற்றியடையச் செய்ய 110% முயற்சி செய்கிறார்கள். ஆயினும்கூட, ஒரு சில நிறுவங்கள் மட்டுமே யூனிகார்ன் கிளப்பில் நுழைய வாய்ப்புக் கிடைக்கிறது. அனைத்து துறைகளிலும் இந்திய ஸ்டார்ட்அப்களுக்கான முன்னோடியில்லாத நிதியுதவிக்கு மத்தியில் இந்தியாவில் யூனிகார்ன் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 100 இந்திய ஸ்டார்ட்அப்கள் யூனிகார்ன்களாக மாறி சாதித்துள்ளது.

Unicorn Startup India: ஸ்டார்ட்அப் உலகில் 100 யூனிகார்ன்களை உருவாக்கி இந்தியா சாதனை...! 100வது ஸ்டார்ட்அப் எது தெரியுமா..?

2022 – 2021 ஆம் ஆண்டின் வரலாற்று சாதனை:

2013 ஆம் ஆண்டு, துணிகர முதலீட்டாளர் (venture capitalist) ஐலீன் லீ, ஒரு பில்லியனுக்கும் அதிகமான மதிப்பீட்டை கொண்ட ஸ்டார்ட்அப்களின் அரிதான தன்மையை குறிக்க, ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் "யூனிகார்ன்" என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். ஒரு காலத்தில் இந்தியாவில் யூனிகார்ன்களின் எண்ணிக்கை குறையாகவே, இருந்தது. ஆனால், கடந்த வாரம் நியோபேங்கிங் ஸ்டார்ட்அப் ஓபன் $50 மில்லியனை திரட்டி இந்தியாவின் 100வது யூனிகார்ன் என்ற நிலையை பெற்றது. தற்போது இந்தியா 100 யூனிகார்ன்களின் தாயகமாக மாறியுள்ளது.

2021 ஆம் ஆண்டு, இந்திய ஸ்டார்ட்அப்கள் 1583 ஒப்பந்தங்களில் 42 பில்லியன் டாலர்களை திரட்டியது. அதன்படி, 42 இந்திய யூனிகார்ன்களாக உருவெடுத்தது. மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியா அதன் யூனிகார்ன்களின் எண்ணிக்கையை 42 லிருந்து 84 ஆக இரட்டிப்பாக்கியது. அதைத்தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியா மேலும் 13 யூனிகார்ன்களை சேர்த்து 100 யூனிகார்ன்கள் (Indian Unicorns 2022) என்ற மைல்கல்லை அடைந்தது.

ஸ்டார்ட்அப் இந்தியாவின் முன்முயற்சி:

2015 ஆம் ஆண்டிலிருந்து ஸ்டார்ட்அப் இந்தியா (Startup India) முன்முயற்சியின் கீழ் பல பாலிசீஸ், எஃப்ஓஎஃப் மற்றும் நிதிகள், இன்குபேசன் புரோகிராம்ஸ், டாக்ஸ் ஹாலிடேஸ் மற்றும் டாக்ஸ் பெனிஃபிட்ஸ் ஸ்கீம்ஸ் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கான மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றம் மற்றும் 783 மில்லியன் (பிப்ரவரி 2022 நிலவரப்படி) செயலில் உள்ள இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கையுடன், இந்தியா இப்போது தொழில்நுட்ப பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு தயாராக உள்ளது.

Startup India Scheme: ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவும் ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் மற்றும் பயன்கள் !

2021-ம் ஆண்டு சாதனை படைத்த நிதியுதவியின் ஆண்டாக இருந்தாலும், 2022 முதல் சில மாதங்களில் இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை எட்டியுள்ளது. இந்த 100 யூனிகார்ன்களின் நிலைத்தன்மை மற்றும் ஒரு புதிய இந்திய ஸ்டார்ட்அப்கள் யூனிகார்ன்களாக மாற உதவுவதில் இப்போது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

50 லட்சம் வரையிலான விதை நிதியுடன் உங்கள் ஸ்டார்ட்அப் யோசனைகளை மேம்படுத்துங்கள்!

அதுமட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் உள்ள கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்ப்பது, துபாய் போன்ற நகரங்களுக்கு இந்திய ஸ்டார்ட்அப்கள் இடம்பெயர்வதைத் தடுப்பது மற்றும் வணிகமுறையை எளிதாக்குவதை அதை மேம்படுத்துவது போன்ற சில தடைகளை அகற்ற அரசாங்கம் பணியாற்ற வேண்டும். அப்படி செய்தால் தான் 2025 ஆம் ஆண்டுக்குள் 250 யூனிகார்ன்களை உருவாக்க முடியும். இப்போது இந்தியாவில் உள்ள யூனிகார்ன்களின் விரிவான பட்டியலை பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள 100 யூனிகார்ன்களின் பட்டியல்:

மொத்தமாக, 100 இந்திய யூனிகார்ன்கள் இன்றுவரை மொத்தம் $90 பில்லியன் நிதி திரட்டியுள்ளன, மேலும் அவற்றின் மதிப்பு சுமார் $333 பில்லியன் ஆகும்.

2022 ஆம் ஆண்டில் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த இந்திய ஸ்டார்ட்அப்கள்,

  • Open
  • Games24x7
  • Oxyzo
  • Amagi
  • CredAvenue
  • Hasura
  • Uniphore
  • Xpressbees
  • Livspace
  • ElasticRun
  • DealShare
  • Darwinbox
  • LEAD
  • Fractal

2021 ஆம் ஆண்டில் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த இந்திய ஸ்டார்ட்அப்கள்,

  • Acko Insurance
  • Apna
  • Bharatpe
  • BlackBuck
  • Blinkit (Grofers)
  • Browserstack
  • CarDekho
  • Chargebee
  • CoinDCX
  • CoinSwitch Kuber
  • CRED
  • Cure.Fit
  • Digit Insurance
  • Droom
  • EaseMyTrip
  • Eruditus
  • GlobalBees
  • Good Glamm Group
  • Groww
  • Gupshup
  • Infra.Market
  • Innovaccer
  • Licious
  • Mamaearth
  • MapmyIndia
  • Meesho
  • Mensa Brands
  • Mindtickle
  • MobiKwik
  • MPL - Mobile Premier League
  • Moglix
  • NoBroker
  • OfBusiness
  • PharmEasy
  • Pristyn Care
  • Rebel Foods
  • ShareChat
  • Slice
  • Spinny
  • UpGrad
  • Urban Company
  • Vedantu
  • Zeta
  • Zetwerk

2020 ஆம் ஆண்டில் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த இந்திய ஸ்டார்ட்அப்கள்,

  • Cars24
  • FirstCry
  • Glance
  • Nykaa
  • Pine Labs
  • Postman
  • Razorpay
  • Unacademy
  • VerSE Innovation (DailyHunt)
  • Zenoti
  • Zerodha

2019 ஆம் ஆண்டில் யூனிகார்ன்களாக மாறிய ஸ்டார்ட்அப்கள்,

  • BigBasket
  • Delhivery
  • Dream11
  • Druva
  • Icertis
  • Lenskart
  • Ola Electric

2018 ஆம் ஆண்டில் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த இந்திய ஸ்டார்ட்அப்கள்

  • Billdesk
  • BYJU'S
  • Freshworks
  • OYO
  • Paytm Mall
  • PhonePe
  • Policybazaar
  • Rivigo
  • Swiggy
  • Udaan
  • ReNew Power (2017)

2016 & அதற்கு முன் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த இந்திய ஸ்டார்ட்அப்கள்,

  • Hike
  • ShopClues
  • InMobi
  • Flipkart
  • MakeMyTrip
  • Mu Sigma
  • Ola
  • Snapdeal
  • Info Edge
  • Paytm
  • Quikr
  • Zoho
  • Zomato

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்