Netflix Layoffs: கடந்த சில மாதங்களாகவே, வணிக உலகில் ஏற்பட்ட பெரிய பொருளாதார நெருக்கடியால் பல ஸ்டார்ட்அப் உட்பட பெரிய நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். உண்மையை சொல்லப்போனால் அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்த சில நாட்கள் கத்தி முனையில் நிற்பது போன்ற பயம். ஆனால், இந்த பணிநீக்கம் குறையும் என்று நினைத்த வேளையில் தான் அதன் தீவிரம் மேலும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், பொருளாதார நெருக்கடியால் அடிவாங்கிய பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் கடந்த மாதம் 150 பேரை பணிநீக்கம் செய்திருந்தது. இந்த நிலையில், செலவுக் குறைப்பு நடவடிக்கையாக மேலும் 300 ஊழியர்களை அதாவத் தனது சுமார் 4% பணியாளர்களை கடந்த ஜூன் 24 ஆம் தேதி பணிநீக்கம் செய்துள்ளது.
நெட்பிளிக்ஸ் தனது முதல் காலாண்டு வருவாயை அறிவித்த பிறகு வந்துள்ள அறிவிப்பு இதுவாகும். இந்த வேலைநீக்க நடவடிக்கைகளுக்கு காரணம் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் தனது கணிசமான சந்தாதாரர்களை இழந்ததே.
இந்த வேலைநீக்கம் அதன் அமெரிக்க பணியாளர்களை பெரிய அளவில் பாதித்துள்ளன. அதுமட்டுமல்லாமல், நிறுவனம் ஒரு அபாயகரமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதாவது, "சென்ற காலாண்டில் (Q1-ல்) 2,00,000 சந்தாதாரர்களை இழந்திருப்பதாகவும், அடுத்த காலாண்டில் (Q2-ல்) மேலும் 2 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் தளத்தை விட்டு வெளியேறுவார்கள் என்றும்" நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…