Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

Monthly Funding Galore 2022: இந்திய ஸ்டார்ட்அப்களின் இந்த மாசத்தோட நிதியை கேட்டிங்கனா ஷாக் -ஆகி போய்டுவீங்க... 

Nandhinipriya Ganeshan [IST]
Monthly Funding Galore 2022: இந்திய ஸ்டார்ட்அப்களின் இந்த மாசத்தோட நிதியை கேட்டிங்கனா ஷாக் -ஆகி போய்டுவீங்க... Representative Image.

Monthly Funding Galore 2022: பிளாக்பஸ்டர் நிதி திரட்டலுக்குப் பிறகும், கடந்த இரண்டு மாதங்களாக முதலீடுகள் மிகவும் அதிகப்படியான வீழ்ச்சியைக் கண்டுள்ளதால், இந்திய ஸ்டார்ட்அப்களுக்கு பொருதாளார நெருக்கடி காலம் என்றே சொல்லலாம். நாம் கேள்விப்பட்டிருப்போம், ஏராளமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்தி பெரும் பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல நிறுவனங்கள் இழுத்து மூடும் அளவிற்கு வந்துவிட்டது. இப்படி மோசமான சூழ்நிலையில் தான் இந்திய ஸ்டார்ட்அப்கள் பயணம் செய்துவருகின்றன. 

மே மாத ஒப்பந்தங்கள்:

தரவுகளின்படி, மே மாதத்தில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 114 ஒப்பந்தங்களின் மூலம் 1.74 பில்லியன் டாலர்கள் நிதியுதவியை திரட்டியுள்ளன. இதில் 33 ஸ்டார்ட்அப்கள் அவற்றின் வளர்ச்சி நிலையில் உள்ளதாகவும், 81 ஆரம்ப நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், மொத்த நிதியுதவி பெற்ற ஸ்டார்ட்அப்களில் 16 நிறுவனங்கள் தங்களது நிதியுதவியை (undisclosed deals) வெளியிடவில்லை. 

கடும் சரிவு:

மே மாதத்தின் மொத்த நிதியுதவி மதிப்பை ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 34% க்கும் அதிகமான வீழ்ச்சியாகும். அதாவது, ஏப்ரல் மாதத்தில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 2.65 பில்லியன் டாலர் நிதியை பெற்றது. அதேபோல், மார்ச் மாதத்தில், இந்திய ஸ்டார்ட்அப்களின் மொத்த முதலீடு 4 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாபெரும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமே, பெரிய சுற்றுகள் இல்லாதது மற்றும் சில ஸ்டார்ட்அப்களின் நிதி தாமதம் போன்ற தற்போதைய மோசமான சந்தை நிலைமைகளே.

ஒரே ஒரு யூனிகார்ன்:

மே 2 ஆம் தேதி நியோபேங்கிங் தளமான ஓப்பன் நாட்டின் 100 வது யூனிகார்னாக உருவவெடுத்தது. இதன்பின், இந்திய ஊடகங்கள் முழு வீச்சில் இருந்தன. ஆனால், அதன்பிறகு ஒரு யூனிகார்ன்கள் கூட உருவாகவில்லை. இது தான் ஸ்டார்ட்அப் துறைக்கே மிகப் பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. 

இந்த மாத Acquisitions:

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், Unacademy, Vedantu, Meesho, OkCredit, mFine, Trell, Ola போன்ற யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. அதுமட்டுமல்லாமல், Udayy மற்றும் Lido போன்ற ஸ்டார்ட்அப்கள் இழுத்து மூடும் அளவிற்கு சென்றுவிட்டது. உண்மையை சொல்லப்போனால், கடந்த இரண்டு மாதம் ஸ்டார்ட்அப் உலகையே திக்கு முக்காட வைத்துள்ளது. இது தொடருமா? இல்லை இதோடு முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த சரிவால், ஒரே ஒரு மாதத்தில் மட்டும் 19 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மற்ற பெரிய நிறுவனங்கள் வாங்கியுள்ளன. ஆனால், இந்த கையப்படுத்துதல் எண்ணிக்கையானது ஏப்ரல் மாதத்தில் 15 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [மே 23 - மே 28]....

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்