Mon ,Sep 26, 2022

Exclusive

சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கி இன்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நான்கு இந்திய பிராண்ட்ஸ்...

Nandhinipriya Ganeshan August 16, 2022 & 14:00 [IST]
Representative Image. Representative Image.

நம் ஒட்டுமொத்த இந்தியாவும் 75 -வது சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியதை கண்டு மகிழ்ந்தோம். அந்தவகையில், நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே தொடங்கப்பட்டு இன்றும் நிலைத்திருக்கும் அந்த நான்கு இந்திய பிராண்டுகளை பற்றிய சுவாரஸ்ய கதையை தான் பார்க்கப்போகிறோம்.


இந்த சுதந்திர நாட்டிலும் ஒரு கம்பெனியை உயர்த்துவது என்பது பெரும்பாடாக இருக்கிறது. இருப்பினும், இந்த பிராண்டுகள் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே ஆரம்பித்து எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சமாளித்தும், காலத்திற்கேற்ப தங்களுடைய செயல்பாடுகளை மாற்றியமைத்துக் கொண்டும் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருவதை காணமுடிகிறது.


Dabur - 1884

டாபர் இந்தியா நிறுவனம் 'Dabur India', கொல்கத்தாவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எஸ்.கே.பர்மன் என்பவரால் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் ஒரு சிறிய மருந்தகமாக அதன் செயல்பாடுகளை தொடங்கினார். இந்தியாவின் ஹெல்த்கேர் வணிகத்திற்கு இந்த பிராண்ட் அடித்தளம் போட்ட காலகட்டம் அது. ஆயுர்வேதத்தின் உதவியுடன் டாக்டர் எஸ்.கே.பர்மன் காலரா, மலேரியா போன்ர நோய்களுக்கு மருந்து தயாரித்து வந்தார். பின்னர், படிப்படியாக நிறைய விதமான மூலிகைகளை சேர்த்து பல்வேறு விதமான மருந்துகளையும் தயாரிக்க ஆரம்பித்தார். காலம் கடக்க வணிகமும் நல்ல முறையில் விரிவடையத் தொடங்கியது, அந்தநிலையில் 1907 ஆம் ஆண்டு டாக்டர் எஸ்.கே.பர்மன் உயிரிழக்க நிறுவனத்தின் பொறுப்பு அடுத்த தலைமுறையினரை கைகளுக்கு மாறியது. தற்போது டாபர் இந்தியா உலகம் முழுவதும் ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

Mysore Sandal Soap - 1916

சந்தன நறுமணத்தில் சோப் என்றால் நம்மில் பலருக்கும் ஞாபகம் வருவது மைசூர் சாண்டில் சோப்பாக தான் இருக்கும். மைசூர் நகரம் ராயல் ஃபேமிலிகளுக்கு மட்டுமல்ல, சந்தனத்திற்கு பிரபலமான நகரம். 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைசூர் சாண்டல் சோப் நிறுவனம் முதலில் எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்து தொழிற்சாலை அமைத்து சந்தன எண்ணெயை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். ஆனால் அப்போது உலகப்போர் நடந்துக்கொண்டிருந்ததால் சந்தனமர வர்த்தகம் முற்றிலுமாக பாதித்தது. இதனால், நகரத்திலேயே அதிகளவில் சந்தன கட்டைகள் தேங்கிவிட்டன. இதைப் பார்த்த மைசூர் திவான் மோக்சகுண்டம் விசுவேஸ்வரய்யா அந்த திட்டத்தை மாற்றி சந்தன பவுடர், சந்தன எண்ணெய் கலவையில் 1918 ஆம் ஆண்டு சந்தன சோப் உருவாக்கப்பட்டு விற்பனை செய்தார். அதன்பிறகு, இந்த சோப்பிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. தற்போது ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறது.

MTR - 1924

யஜ்நாராயணா மையா மற்றும் அவரது சகோதரர்களால் நிறுவப்பட்ட எம்டிஆர் பெங்களூரு ஜேசி சாலையில், பரபரப்பான தெருவில் இன்றும் உயர்ந்து நிற்கும் உணவகத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த உணவகத்தில் வெண்ணெய் கலந்த மசாலா தோசையை சாப்பிடுவதற்காகவே கர்நாடக முதல்வர் ஒரு நாள் வரிசையில் நின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு, இரண்டாம் உலகப் போரின் போது இட்லியின் முக்கிய மூலப்பொருளான அரிசிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது எம்டிஆர் உணவகத்தில் வேலைசெய்து கொண்டிருந்த சமையல்காரர்கள் ஏன் ரவையைப் பயன்படுத்தி இட்லி செய்யக்கூடாது என்று திட்டமிட்டனர், அப்படி பிறந்தது தான் இந்த ரவா இட்லி. தற்போது இரண்டு முறைகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஒன்று உணவு பொருட்களை தயாரிப்பது மற்றும் மற்றொன்று உணவை தயாரிப்பது. இப்போது எந்த பொருள் எடுத்தாலும் உயர்ந்த தரத்தில் இருப்பது எம்டிஆர் மட்டுமே.

Parle G - 1929

பார்லே ஜி பிஸ்கட் இல்லாமல் எந்த டீயும் முழுமையடையாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிஸ்கட்டின் மீது அவ்வளவு பிரியம். உலகின் மிகப் பெரிய பிஸ்கட் பிராண்டாக விளங்கும் பார்லே ஜி 1929 ஆம் ஆண்டு மும்பையில் வைல் பார்லேயில் மோகன்லால் தயாள் என்பவரால் தொடங்கப்பட்டது. பார்லேயின் முதல் தயாரிப்பு ஆரஞ்சு மிட்டாய் தான், பத்து ஆண்டுகளுக்கு பிறகு தான் பிஸ்கட் தயாரிக்கும் பணியைத் தொடங்கினார். பார்லே என்ற நகரில் உள்ளதால், நிறுவனத்திற்கு பார்லே என்று பெயர் வந்தது. 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்கான ஒலி எழுப்பப்பட்ட போதும், நிறுவனம் தனது முதல் பிஸ்கட்டை சுட்டது. 2013 ஆம் ஆண்டில், ரூ. 5000 கோடியைத் தாண்டிய முதல் இந்திய எஃப்எம்சிஜி பிராண்ட் இதுவாகும்.


Tag: Indian Brands Before Independence List | Dabur India History In Tamil | Parle G History In Tamil | Mtr Foods History In Tamil | Mysore Sandal Soap History In Tamil.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Related Posts