Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

Startup Mania 7.0: கல்லூரி மாணவரா? அல்லது ஸ்டார்ட்அப் நிறுவனமா? ஏராளமான சலுகைகளுடன் ரொக்க பரிசுகளை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு..!

Nandhinipriya Ganeshan October 27, 2022 & 16:03 [IST]
Startup Mania 7.0: கல்லூரி மாணவரா? அல்லது ஸ்டார்ட்அப் நிறுவனமா? ஏராளமான சலுகைகளுடன் ரொக்க பரிசுகளை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு..!Representative Image.

StartupTN/GoTN, CIIYi, Erode, NAN, Erode மற்றும் [email protected] ஆகியவை இணைந்து 'ஸ்டார்ட்அப் மேனியா' என்ற போட்டியின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இருந்து அறிவியல், பொறியியல், மெடிக்கல், பாலிடெக்னிக் மற்றும் மேனேஜ்மெண்டில் உள்ள இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி மாணவர்கள், மற்றும் கண்டுபிடிப்பாளர்கள், ஸ்டார்ட்அப்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, பல மாணவர்களை தொழில் முனைவோர்களாகவும், பல தொழில் முனைவோர்களை அடுத்த நிலைக்கு செல்லவும் பலருக்கு முதலீடு பெறவும் உதவி செய்து வருகின்றன.

ஸ்டார்ட்அப் மேனியா இதுவரை 6 பதிப்புகளை வெற்றிகரமாக கடந்து, தற்போது 7வது பதிப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, கல்லூரி படிப்பு முடித்தவுடன் சொந்த தொழில் தொடங்க விரும்பும் மாணவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள நிறுவனத்தை மேலும் மேம்படுத்த விரும்பும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உடனே அப்ளை செய்து பயனடையுங்கள். 

போட்டி வழிகாட்டுதல்கள்:

➤ இந்த போட்டியானது இரண்டு விதமாக நடைபெறவுள்ளது. அதாவது, பொறியியல், கலை & அறிவியல், பி-ஸ்கூஸ், பாலிடெக்னிக், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விவசாயக் கல்லூரிகளின் UG/PG மாணவர்களுக்கு தனியாகவும், முன்னாள் மாணவர்கள், ஸ்டார்ட்அப் தொடங்க திட்டமிட்டுள்ளவர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் வல்லுநர்களுக்கு தனியாகவும் நடைபெறவுள்ளது. 

➤ ஒரு தனிநபராகவோ அல்லது 3 பேர் அடங்கிய ஒரு குழுவாகவோ விண்ணப்பிக்கலாம். 

➤ ஒரு குழு ஒரு யோசனையை மட்டுமே சமர்ப்பிக்க முடியும். அதேபோல், ஒரு தனிநபர் ஒரு குழுவில் மட்டுமே உறுப்பினராக இருக்க முடியும்.

➤ இப்போட்டிக்கு பதிவு கட்டணம் எதுவும் கிடையாது.

➤ இந்த பிசினஸ் மாடல் போட்டியில் கலந்துக்கொள்ள 30.10.2022 அல்லது அதற்கு முந்தைய தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.

➤ சமர்ப்பிக்கப்பட்ட பதிவுகளை கவனமாக மதிப்பாய்வு செய்த பிறகே, பங்கேற்பாளர்களை ப்ரிலிம்ஸிற்கான ஷார்ட்லிஸ்ட் செய்யப்படும்.

➤ ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் ஆன்லைனில் அறிவிக்கப்பட்டுள்ள இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும். மேலும், ப்ரிலிம்ஸிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விளக்கக்காட்சியை (presentation) தயார் செய்ய வேண்டும். 

➤ அதை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 08.11.2022, மாலை 04.00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

➤ பிசினஸ் பிளான்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கலாம். ஆனால் விளக்கக்காட்சி உள்ளடக்கம் முதன்மையாக ஆங்கிலத்தில் இருப்பதை உறுதிசெய்யவும். தேவையான இடங்களில் வேண்டுமானால் தமிழ் உள்ளடக்கத்தை சேர்த்துக்கொள்ளலாம். 

➤ ப்ரிலிம்ஸிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் உணவு மற்றும் இடத்திற்குச் செல்வதற்கு ஆகும் செலவு அனைத்தும் உங்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

➤ இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழு [email protected] இல் 2 நாட்கள் பூட்கேம்பில் கலந்து கொள்ள வேண்டும். இந்த பூட்கேம்பில் ஒரு அணிக்கு 2 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.

➤ அதேபோல், பூட்கேம்பில் பங்கேற்பவர்கள் பயணச்செலவுகளை நீங்களே கவனித்துக்கொள்ள வேண்டும். 2 நாட்கள் பூட்கேம்ப்க்கான தங்கும் இடம் மற்றும் உணவு ஆகியவற்றை மட்டும் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். 

Startup Mania 7.0: கல்லூரி மாணவரா? அல்லது ஸ்டார்ட்அப் நிறுவனமா? ஏராளமான சலுகைகளுடன் ரொக்க பரிசுகளை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு..!Representative Image

யார் விண்ணப்பிக்கலாம்?

➤ தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள அறிவியல், பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மற்றும் மேலாண்மைப் பிரிவுகளில் இருந்து இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி மாணவர்கள்.

➤ தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டதாரிகள், ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள்.

தகுதி:

➤ இந்த போட்டிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

➤ அதேபோல், ஒரு நிறுவனம் கூட்டாண்மையாக அல்லது தனி ஒருவரின் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும்.

➤ ஒரு நிறுவனம் ஆண்டுக்கு ரூ.25 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்டிருக்கக் கூடாது.

ரிவார்ட்ஸ் (Rewards):

மாணவர்களுக்கு:

முதல் பரிசு - ரூ.30,000/-

2ம் பரிசு - ரூ.20,000/-

3ம் பரிசு - ரூ.10,000/-

பட்டதாரிகள் / ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு:

முதல் பரிசு - ரூ.30,000/-

2ம் பரிசு - ரூ.20,000/-

அதுமட்டுமல்லாமல், Mentoring, Incubation மற்றும் Funding போன்ற பல சலுகைகளும் உண்டு. 

கடைசி தேதி: 30.10.2022

இப்போதே விண்ணப்பியுங்கள்: 

மாணவர்கள்: Students Application Form

பட்டதாரிகள் / ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்: Graduates / Startups  Application Form 

மேலும் விபரங்களுக்கு: Startup Mania 7.0

Also Read: உங்க ஸ்டார்ட்அப் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல நிதிஉதவி எதிர்பார்க்கிறீங்களா? இதோ ஓர் அரிய வாய்ப்பு..

Tag: Startup Mania 7.0 | Startup Mania 2022 | Startup Mania 7 0 Idea Cum Business Plan Competition | Startup Challenge 2022 | Recent Startup News | Startup News In Tamil | Startup News Tamil | ஸ்டார்ட்அப் மேனியா 7.0 .


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்