Sun ,Sep 24, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

புதுசா தொழில் தொடங்கனுமா?; 25% மானியத்துடன் அரசு தரும் அசத்தல் கடன் உதவி திட்டம் - முழு விவரம் இதோ! 

KANIMOZHI Updated:
புதுசா தொழில் தொடங்கனுமா?; 25% மானியத்துடன் அரசு தரும் அசத்தல் கடன் உதவி திட்டம் - முழு விவரம் இதோ! Representative Image.

2023ம் ஆண்டு பிறந்தாச்சு... இந்த வருஷமாவது தொழிலாளியாக இல்லாமல் முதலாளியாக மாறலாமா?, படிச்சி முடிச்சாச்சு வேலைக்கு போகமா சொந்தமா, சின்னதா ஸ்டார்ட்அப் ஆரம்பிக்கலாமா? அப்படின்னு பல யோசனைகள் தோன்றக்கூடும். ஆனால் புதிதாக தொழில் தொடங்க முதலீட்டிற்கு என்ன செய்வது என்பது பலருக்கும் தெரியாது. அப்படி புதிதாக தொழிற்சாலை அமைக்கவும், உபகரணங்கள், இயந்திரங்கள் வாங்கவும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவுவதற்காகவே தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் செயல்பட்டு வருகிறது. 

 

நீங்கள் ஏற்கனவே இருக்கும் நிறுவனமாக அல்லது முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருப்பினும் , குறைந்த வட்டி விகிதத்தில் கடனைப் பெற விரும்பினால், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் உங்களுக்கு ஏற்ற ஒரு திட்டத்தை வழங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இக்கழகம் மத்திய மற்றும் மாநில அரசு மானியங்களை வழங்கும் முகவராகவும் செயல்படுகிறது. 

 

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. மேலும் தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலமாக ஐ.டி.ஐ., பிளஸ், டிப்ளமோ படித்த இளைஞர்களில் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு 25 சதவீத மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. 

 

கால கடன் (TERM LOAN) அதிகபட்சமாக 27 கோடி ரூபாய் வரையிலும், பார்ட்னர்ஷிப் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 41 கோடி ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. விடுதி மற்றும் உணவகம் திருமண மண்டபம் வணிக வளாகம் ஆகிய கட்டுவதற்கும், அவசர நிதி தேவை, மூலதன கடன், கிடங்குகள் மற்றும் குடோன், குளிர்பதன கிடங்குகள் அமைக்கவும் கடன் வழங்கப்படுகிறது. புதிய நிறுவனங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 9 ஆண்டுகள் வரை தவணைக் காலம் அளிக்கப்படுகிறது.

 

பிரதானமாக கால கடன் (Term Loan), நடைமுறை மூலதனக் கடன் (Working Capital Loan) ஆகிய இரண்டு கடன் வகைகளின் கீழ் பல்வேறு திட்டங்கள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. சிறிய கூட்டுக் கடன் திட்டம், சுலபக்கடன் திட்டம்/விதை மூலதனத் திட்டம், நவீனமயமாக்கும் திட்டம், பதிவுபெற்ற மருத்துவர்கள் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்னுற்பத்தி எந்திரம் வாங்க நிதியுதவி, உபகரண மறுநிதியுதவித் திட்டம் என பலவகையான சிறப்பு திட்டங்கள் உள்ளன. 

 

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திடமிருந்து பெறப்படும் கடன்களுக்கு 3% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. 

புதுசா தொழில் தொடங்கனுமா?; 25% மானியத்துடன் அரசு தரும் அசத்தல் கடன் உதவி திட்டம் - முழு விவரம் இதோ! Representative Image

விண்ணப்பிப்பது எப்படி? 

  • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://www.tiic.org/ க்கு செல்ல வேண்டும். 
  • அங்கு General Term Loan, Working capital, Equipment Finance, bill Finance ஆகியவற்றுடன் மத்திய, மாநில அரசுகளின் சலுகை திட்டங்களும் இடம் பெற்றிருக்கும். அதில் உங்களுடைய நிறுவனம் மற்றும் அதன் தேவைக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். 
  • அதன் பின்னர் அதில் உள்ள Application என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 
  • நேரில் சென்று விவரங்களை அறிய விரும்புவோர் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் தலைமை அலுவலகம் நந்தனம் சென்னையில் உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் 6 மண்டலமாக பிரிக்கப்பட்டு அதனில் 25 கிளை அலுவலகங்களில் இயங்கி வருகிறது. 
  • வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட கிளை அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும், வாடிக்கையாளரால் கடன் கணக்கை செயல்படுத்துவதற்கான வசதிக்காக, தகுதிவாய்ந்த அதிகாரத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, கடன் மற்ற கிளைகளிலும் விண்ணப்பிக்கப்படலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்