ShareChat Funding News Tamil: இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு சமூக ஊடகம் தான் ஷேர்சாட். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு அடுத்தப்படியாக ஷேர்சாட் தான் என்று சொல்லும் அளவிற்கு அவ்வளவு பயனர்களை தன் வசம் வைத்துள்ளது. இது இந்தியாவில் பிராந்திய மொழிகளில் வேகமாக வளரும் சமூக ஊடக தளமாகவும் கருதப்படுகிறது.
மேலும், சமீபத்தில் ஷேர்சாட்டின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் மீடியா ஜாம்பவான்களான கூகுள், டைம்ஸ் குரூப் மற்றும் சிங்கப்பூரின் டெமாசெக் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து சுமார் 300 மில்லியன் டாலர்களை புதிய நிதியாக திரட்டியுள்ளது. இந்திய ஸ்டார்ட்-அப்களுக்கான ஒரு கரடுமுரடான சந்தையில் கூகுளின் இந்த முதலீடு, குறுகிய வீடியோ துறை (short video sector) மற்றும் ஸ்டார்ட்-அப் முதலீட்டு ஆய்வறிக்கைக்கான பசியை காட்டியுள்ளது. தற்போது ஷேர்சாட்டின்
ShareChat:
பெங்களூரை தளமாக கொண்ட சோசியல் மீடியா தளமான ஷேர்சாட், 2015 ஆம் ஆண்டு பானு சிங், அங்குஷ் சஸ்தேவா மற்றும் ஃபரித் அஹ்சன் ஆகியோரால் நிறுவப்பட்டு, ஜூன் 2022 ஆம் ஆண்டு மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் (Mohalla Tech Pvt. Ltd) வெளியிடப்பட்டது. கடந்த வருடத்தில் இந்திய அரசாங்கம் TikTok, Helo செயலியை தடை செய்த பிறகு, இந்த ஆப் மிகவும் ஃபேமஸ் ஆகிவிட்டது. அதேபோல், மோஜ் செயலியும் (Moj ShareChat) ஷேர்சாட்டுன் இணைந்து ஒரே வருடத்தில் 160 மில்லியன் வாடிக்கையாளர்களை கவர்ந்து சாதனை படைத்தது.
ShareChat மற்ற நெட்வொர்க்கிங் தளத்தைப் போலவே, அதன் பயனர்களையும் ஒருவரோடொருவர் உள்ளடக்கத்தை (Post) உருவாக்க, கண்டறிய மற்றும் பகிர அனுமதிக்கிறது. இருப்பினும், பகிர்ந்த உள்ளடக்கத்திற்கு ஷேர்சாட் பயன்படுத்தும் பிராந்திய மொழிகள் தான் அதன் தனித்துவத்தை உயர்த்தி காட்டுகிறது.
ஷேர்சாட் நிதி குவிப்பு | ShareChat Funding
ஷேர்சாட்டின் தாய் நிறுவனமான மொஹல்லா டெக், இப்போது லைட்ஸ்பீட் வென்ச்சர்ஸ், ஸ்னாப் இன்க், டைகர் குளோபல், ட்விட்டர் போன்ற பல மார்க்கீ முதலீட்டாளர்களிடமிருந்து (marquee investors) புதிய நிதியை திரட்டி வருகிறது.
அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு குருகிராமை தலைமையிடமாக கொண்ட Times Internet ஷேர்சாட்டில் $60.5 மில்லியன் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு Temasek, Moore Strategic Ventures, Harbourvest மற்றும் India Quotient போன்ற முதலீட்டாளர்களின் பங்கேற்புடன், Alkeon Capital தலைமையில் நடத்தப்பட்ட சீரிஸ் G நிதிச் சுற்றில் $266 மில்லியன் திரட்டியது.
கடந்த ஆண்டு ஜூலையில், ஷேர்சாட் சீரிஸ் எஃப் நிதிச் சுற்றில் $145 மில்லியனைப் பெற்றது. அதற்கு முன்பு 2021 ஏப்ரலில், ஷேர்சாட் ஸ்டார்ட்அப் அதன் தொடர் E சுற்றில் $502 Mn திரட்டியது, அதன் மூலம் யூனிகார்ன் கிளப்பில் அடியெடுத்து வைத்தது.
உள்நாட்டில் வளர்க்கப்பட்ட சமூக ஊடக ஸ்டார்ட்அப்பான ஷேர்சாட், 2021 ஆம் ஆண்டில் மட்டும் $913 மில்லியனைத் திரட்டியது, இதன் மூலம் திரட்டப்பட்ட மொத்த நிதி $1.77 பில்லியன் ஆகும். தற்போது, ஷேர்சாட் இந்தியாவின் மிக பிரபலமான சமூக ஊடக தளமாக உருவெடுத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள வும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…