Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

Weekly Funding Galore: இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [மே 30 - ஜூன் 04]...

Nandhinipriya Ganeshan June 05, 2022 & 11:00 [IST]
Weekly Funding Galore: இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [மே 30 - ஜூன் 04]...Representative Image.

Weekly Funding Galore: இந்த வாரம், 33 இந்திய ஸ்டார்ட்அப்கள் நிதி திரட்டியுள்ளன, அதில் 28 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 525.81 மில்லியன் டாலர்கள் பெற்றுள்ளன. ஆனால், மொத்த நிதியுதவி பெற்ற ஸ்டார்ட்அப்களில் ஐந்து நிறுவனத்தின் நிதியுதவி தொகை வெளியிடப்படவில்லை.  MoEngage மற்றும் Cuemath ஆகியவை முறையே $77 மில்லியன் மற்றும் $57 மில்லியனைப் பெற்று நிதியுதவி பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன.கடந்த வாரத்தை பொறுத்த வரை மொத்தம் 30 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 251 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதியை திரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரத்தின் ஒப்பந்தங்கள்:

கஸ்டமெர் என்கேஜ்மெண்ட் பிளாட்ஃபார்மான MoEngage, ஸ்டெட்வியூ கேப்பிட்டல், மல்டிபிள்ஸ் ஆல்டர்நேட் அசெட் மேனேஜ்மென்ட், எய்ட் ரோட்ஸ் வென்ச்சர்ஸ் மற்றும் மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா ஆகியோரின் பங்கேற்புடன், கோல்ட்மேன் சாக்ஸ் அசெட் மேனேஜ்மென்ட் மற்றும் பி கேபிட்டல் தலைமையிலான சீரிஸ் E சுற்றில் $77 மில்லியனை திரட்டியது.

70க்கும் மேற்பட்ட நாடுகளில் முன்னிலை வகிக்கும் எட்டெக் ஸ்டார்ட்அப்பான கியூமத் நிறுவனம், ஆல்பா வேவ் தலைமையிலான புதிய ஈக்விட்டி நிதி சுற்றில் 57 மில்லியன் டாலர் நிதியை திரட்டியுள்ளது. இந்த சுற்றில் தற்போதைய முதலீட்டாளர்களான Alphabet’s CapitalG, Lightrock India, Manta Ray, Sequoia Capital India, மற்றும் Unitus உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர். 

Flipkart இன் முன்னாள் நிர்வாகி Ankit Nagori என்பவரால் நிறுவப்பட்ட கிளவுட் கிச்சன் நிறுவனமான Curefoods, புதிய மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து சீரிஸ் C நிதிச் சுற்றில் $50 மில்லியன் திரட்டியுள்ளது. 

ஃபின்டெக் யூனிகார்ன் slice நிறுவனம், அதன் தற்போதைய முதலீட்டாளர்களான Moore Strategic Ventures, investor GMO VenturePartners, மற்றும் Insight Partners  ஆகியோரின் பங்கேற்புடன், டைகர் குளோபல் தலைமையில் சீரிஸ் C நிதிச் சுற்றில் 50 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. 

Direct-to-consumer (D2C), பியூட்டி பிராண்டான Sugar Cosmetics, தற்போதுள்ள முதலீட்டாளர்களான A91 பார்ட்னர்ஸ், எலிவேஷன் கேபிடல் மற்றும் இந்தியா குவோஷியன்ட் ஆகியோரின் பங்கேற்புடன் L Catterton தலைமையிலான $50 மில்லியனை திரட்டியுள்ளது.

வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தங்கள் (Undisclosed deals): Unotag, Glovatrix, Kwikpic, Coffee மற்றும் EzeRx போன்ற ஐந்து நிறுவனங்கள், அதன் நிதி விவரங்களை வெளியிடவில்லை.

இந்த வார Acquisitions:

இந்த வாரத்தில் 30 நிறுவனங்களின் நிதி திரட்டல்களை தவிர, மூன்று கையகப்படுத்தல்களும் (acquisitions) காணப்பட்டன. அந்த வகையில், அக்ரிகெட் நிறுவனமான Arya.ag டேட்டா சையின்ஸ் ஸ்டார்ட்அப்பான Prakshep -வையும், கன்வெர்சேஷனல் மெசேஜிங் நிறுவனமான Gupshup, கஸ்டமர் சர்வீஸ் ஸ்டார்ட்அப்பான OneDirect -வையும், எட்டெக் நிறுவனமான Kafqa Academy ஆன்லைன் டான்ஸ் அகாடமி ஸ்டார்ட்அப்பான Verb Studio -வையும் வாங்கியுள்ளன. இதன் மதிப்பு வெளியிடவில்லை.


இந்திய ஸ்டார்ட்அப்களின் இந்த மாசத்தோட நிதியை கேட்டிங்கனா ஷாக் -ஆகி போய்டுவீங்க... 


உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்