Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Gautam Adani Success Story Tamil: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர்… அசத்தும் அதானி..!! 

Nandhinipriya Ganeshan June 05, 2022 & 16:00 [IST]
Gautam Adani Success Story Tamil: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர்… அசத்தும் அதானி..!! Representative Image.

Gautam Adani Success Story Tamil: குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானி (Indian Coal Magnate) கடந்த மூன்று ஆண்டுகளாகவே, தனது வணிகத்தில் அசுர வளர்ச்சியை கண்டு வருகிறார். அதன்படி, கடந்த ஆண்டு 8.9 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு, இந்த ஆண்டு அதாவது 2022 ஆம் ஆண்டு மே மாதம் $105.9 பில்லியனாக அதிகரித்துள்ளது. 

20 வயதிலேயே லட்சாதிபதி

இன்று ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்ராக இருக்கும் கௌதம் அதானி (Who is adani), தனது 17 வயதில் வைரம் விற்பனை செய்யும் தரகராக மும்பைக்கு அடி எடுத்து வைத்தார். பின்னர், அடுத்த மூன்று வருடத்தில், தனது கடின உழைப்பாலும் மனஉறுதியாலும் தன்னுடிடைய 20 வயதில் லாட்சாதிபதியாக உருவெடுத்தார். 

அதானி எண்டர்பிரைசஸ் 

தனது 26 வது வயதில் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்வதற்காக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை (1988 ஆம் ஆண்டு) தொடங்கினார். இதோடு சேர்த்து அதானியின் மற்ற 7 நிறுவனங்கள் உள்பட அதானி குழுமம்  உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உருவாகியுள்ளது. 

மேலும், ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தின் ஒப்பந்தம் அதானி எண்டர்பிரைசஸிடம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், 8 விமான நிலையங்களை இயக்கும் ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது. 

அதானி பவர்

அதானி பவர் லிமிடெட் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் அனல் மின் சக்தி உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களை உள்ளடக்கிய 12,450 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை. அதுமட்டுமல்லாமல், குஜராத்தில் 40 மெகாவாட் சூரிய மின் உற்பத்தியும் உள்ளது.

அதானி வில்மர்

வில்மர் இன்டர்நேஷனல் லிமிடெட் (சிங்கப்பூர்) மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம்- அதானி வில்மர் லிமிடெட் ஆரோக்கியமான தேசத்திற்கு பங்களிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனமாகும். நாம் பயன்படுத்தும் "Fortune" சமையல் எண்ணெய் பிராண்டும் இந்த நிறுவனத்தை சேர்ந்தது தான். மேலும், இங்கு சோயா, அரிசி தவிடு, நிலக்கடலை, கடுகு, பருத்தி விதை போன்ற பல்வேறு விதமான எண்ணெய் வகைகள் தயாரிக்கப்படுகிறது. பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் சமையல் எண்ணெய் விலை வரலாறு காணாத விதமாக அதிகரித்த நிலையில், இந்நிறுவனத்தின் மதிப்பு 200% அதிகரித்துள்ளது. 

அதானி சிமெண்ட்

அண்மையில் தான் இந்தியாவில் ஹோல்சிம் நடத்தி வரும் ஏசிசி சிமெண்ட் மற்றும் அம்புஜா ஆகிய நிறுவனங்களை 10.5 பில்லியன் டாலர் கொடுத்து அதானி குழுமம் வாங்கியது. அதன் அடிப்படையில், ஒரே நாளில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாக அதானி சிமெண்ட் உருவெடுத்துள்ளது. 

அதானி க்ரீன் எனர்ஜி

அதானி குழுமத்தின் ஒன்றான Adani Green Energy உலகின் முதல் சூரிய சக்தி உற்பத்தி நிறுவனம். இந்நிறுவனத்தின் மதிப்பு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் படி, $40 பில்லியன் ஆகும். அதாவது, சென்ற மூன்று ஆண்டுகளில் இதன் மதிப்பு 5,500% அதிகரித்துள்ளது. 

அதானி போர்ட்ஸ்

அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகும். அதுமட்டுமல்லாமல், இது கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் 13 முக்கிய சிறு துறைமுகங்களை இயக்கி வருகிறது.  

அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் & AMG மீடியா

சமீபத்தில் தான் அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் லிமிடெட் ரூ. 1 லட்சம் முதலீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் வாயிலாக விளம்பரம், பப்ளிஷிங், கன்டெண்ட் டிஸ்ட்ரிபூஷன், பிராட்காஸ்டிங் போன்ற பிரிவில் தீவிரமாக இறங்க உள்ளதாக அதானி குழுமம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. 

உலகின் No.1

தனது கடின உழைப்பாளும், புத்திசாலித்தனத்தாலும் பல்வேறு துறையில் சாதித்து வரும் இந்தியாவின் நிலக்கரி மேக்னட் கௌதம் அதானி, சமீபத்தில் தான் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்து அசத்தினார். பின்னர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உலக பணக்கார்கள் பட்டியலில் வேகமாக முன்னேறி 6வது இடத்திற்கு சென்றுள்ளார். வணிகத் துறையில் அசுர வளர்ச்சியை கண்டு வரும் இவர் விரைவில் உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார். விரைவில் அந்த பெருமையை பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


Tamilnadu Inspirational Heroes: உலகளவில் வெற்றிக்கொடி நாட்டிய தமிழ்நாட்டின் அசல் ஹீரோஸ்! 


உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்