Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
0.00sensex(0.00%)
நிஃப்டி21,995.85
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

மனித உடலின் மூலம் செயல்படும் 6G டெக்னாலஜி...! எப்புற்ற..? | 6G from Human Body

Manoj Krishnamoorthi Updated:
மனித உடலின் மூலம் செயல்படும் 6G டெக்னாலஜி...! எப்புற்ற..? | 6G from Human BodyRepresentative Image.

மனித பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு மாற்றமும் ஆரம்பத்தில் ஆச்சரியம் தான். செல்போன் வந்த தருணத்தில் சிக்கனல் கவரேஜ் பிரச்சனை எப்போது எல்லாம் சாதாரணமாக மாறிவிட்டது. அதற்கு காரணம் அடுத்தடுத்து உதித்த புதிய தொழில்நுட்பம் தான். மனித உடலின் மூலம் வேலை செய்யும் கொள்ளும் சாதனம் உருவாகவுள்ளது என்பது ஆச்சரியம் தான். மசாசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மனித உடல் சக்தியைக் கொண்டு  6G தொழில்நுட்பம் செயல்படும் என்பதை அறிந்துள்ளனர். 

மனித உடலின் மூலம் செயல்படும் 6G டெக்னாலஜி...! எப்புற்ற..? | 6G from Human BodyRepresentative Image

6G மனித உடல் மூலம் செயல்படுமா..?

ஒயர்லெஸ் டெக்னாலஜியான 5G பல தேசங்களில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தியாவில் 2023 முதல் தான் 5G டெக்னாலஜி அறிமுகமாகிறது. ஆனால் சில இடங்களில் அடுத்த முன்னேற்றமாக 6G டெக்னாலஜி பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டனர். 5G யின் அடுத்த வெர்ஷெனான 6G டெக்னாலஜி 5G யை விட 1000 மடங்கு வேகமானதாக இருக்கும்.  

5G சேவை IoT சாதனங்கள் செயல்பட உதவியாக இருக்கும். தற்போது பயன்படுத்தும் முறையின் அடுத்த பரிமாணமாக LED வைத்து தகவலை  பரிமாற்றம் செய்வது VLC ஆகும். 5G யின் அடுத்த வெர்ஷனான 6G சேவை Visible Light Communication (VLC) மேம்பாட்டை அதிகமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LED மூலம் தகவலை செயல்படுத்துவதால் அதிகமான லீக்கேஜ் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சரிக்கட்ட ஆண்டனாவிற்கு பதிலாக பல்வேறு மீடியத்தை பயன்படுத்தும். அதாவது மரம், ஸ்டீல், சுவர் போன்ற மீடியமை பயன்படுத்தி செயல்படும் என அறியப்பட்டது. அந்த வகையில் மனித உடலையும் ஒரு மீடியமாக எடுத்து கொள்ளும். 

மசாசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்த குழு மனித உடலில் இருக்கும் தேவையற்ற சக்தியைக் கொண்டு 6G செயல்பட முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர். இதனால் வருங்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆண்டனாவாக செயல்படும் 6G தொழில்நுட்பம் உருவாகும் என நம்பப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்