பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் ரூ.149 க்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரூ.150 க்குள் என்ற பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டமானது ஓடிடி (OTT) நன்மையுடன் வருகிறது என்பது இதில் கூடுதல் சுவாரசியமே. ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் இந்த புதிய திட்டத்தை ரகசியமாக கொண்டு வந்துள்ளது. ஏர்டெல் ரூ.149 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதன் வேலிடிட்டி என்ன? ஏற்கனவே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.148 திட்டத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்துக்கொள்வோம்.
ஏர்டெல் அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்திற்கென தனியாக எந்த வேலிடிட்டியும் கிடையாது. இது உங்களிடம் ஏற்கனவே இருக்கும் ஆக்டிவ் பிளானின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும். அதாவது, உங்களிடம் ஏற்கனவே 30 நாட்களுக்கு ஒரு திட்டம் இருந்தால், அதன் வேலிடிட்டியும் 30 நாட்களுக்கு இருக்கும்.
1 ஜிபி டேட்டாவுடன், பயனர்கள் 30 நாட்களுக்கு ஒரே ஒரு ஆப் வழியாக 15 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களில் உள்ள கன்டென்ட்டை அணுக முடியும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் வழியாக கிடைக்கும் கன்டென்ட்டை டேப்லெட், ஸ்மார்ட்போன் அல்லது டெஸ்க்டாப் வழியாக பார்த்துக்கொள்ள முடியும்.
இந்த இரண்டு திட்டங்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அதாவது, ரூ.149-ன் கீழ் உங்களுக்கு வெறும் 1ஜிபி டேட்டா கிடைக்கும். அதுவே ரூ.148 ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தமாக 15ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் ரூ.149-ன் கீழ் 30 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியமிற்கான இலவச அணுகல் கிடைக்கும். ஆனால் ரூ.148-ன் கீழ் எக்ஸ்ட்ரீம் ஆப் வழியாக ஷார்ட் டேங்க் 2-வை பார்ப்பதற்கான அணுகல் மட்டுமே கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…