Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

அமேசானின் நியூ Amazon Air Delivery Drone...இனிமே எல்லாம் வீட்டுக்கு பறந்து வரும் போங்க!

Priyanka Hochumin November 14, 2022 & 11:30 [IST]
அமேசானின் நியூ Amazon Air Delivery Drone...இனிமே எல்லாம் வீட்டுக்கு பறந்து வரும் போங்க!Representative Image.

உலகின் முன்னனி இ-காமெர்ஸ் நிறுவனமாக திகழும் அமேசான் நிறுவனம் Amazon Air Delivery Drone மூலம் தங்களின் டெலிவரிகளை செய்ய ஆரம்பிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Amazon நிறுவனம் 2023 ஆம் ஆண்டு முதல் Amazon Air Delivery Drone பயன்படுத்தி பொருட்களை விநியோகம் செய்ய முடிவெடுத்துள்ளது. மேலும் இந்த டிரோன் குறைந்த அளவு மழை மற்றும் வெப்பத்தை தாங்கும் என்று தெரிவித்துள்ளது. இது வனத்தில் 100 அடி தொலைவில் பறக்கும் மற்றும் 5 பவுண்ட் எடையை தாங்கும் திறன் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டிரோனின் பெயர் ‘MK30’ ஆகும். இது தற்போது உபயோகத்தில் இருக்கும்  ‘MK27-2’ மாடல் டிரோன்களுக்கு பதிலாக பயப்படுத்தப்படுமாம். மேலும் தற்போதுள்ள டிரோன்களை விட 25% சத்தம் குறைவாக இருக்கும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புது டிரோனானது, அமெரிக்காவின் Federal Aviation Administration (FAA) முன்னிலையில் அதனின் பாதுகாப்பு மற்றும் திறன் சோதனை செய்யப்பட்டு பின்னர் செயல்பாட்டிற்கு வரும் என்று அமேசான் கூறுகிறது. இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் இன்றி பொருட்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்யலாம்.

அமேசானின் இந்த Amazon Prime Air Delivery திட்டம் முதல்கட்டமாக கலிபோர்னியா, டெக்ஸாஸ் ஆகிய மாகாணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் படிப்படியாக அமெரிக்கா முழுவதும் அறிமுகம் செய்யப்படும். பின்பு 2025 ஆம் ஆண்டிற்கு பிறகு  உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்