டிம் குக் அவர்கள் சமீபத்தில் சொன்ன ஒரு வரை மொத்த தொழில்நுட்ப உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. டைம் ட்ராவெல் என்பது கண்டிப்பா இருக்கா? அந்த சுவாரஸ்ய நிகழ்வு என்னென்னு பாப்போம்.
உலகெங்கிலும் உள்ள கலை ஆர்வலர்கள் 350 ஆண்டுகள் பழமையான ஒரு ஓவியத்தில் டைம் ட்ராவல் நடந்ததற்கான ஆதாரம் உள்ளது என்பதை உறுதியாக நம்புகின்றனர். டச்சுன்னு பொற்கால ஓவியர் என்று மக்களால் போற்றப்படும் பீட்டர் டி ஹூச்சால் உருவாக்கிய பொக்கிஷம் தான் அது. அந்த ஓவியம் "உள்துறையில் ஒரு கடிதம் மற்றும் ஒரு தூதருடன் இளம் பெண்" என்ற பெயரில் 1670 இல் உருவாக்கப்பட்டது.
ஆண் ஒருவர் "கடிதம்" கொண்டு வர, ஒரு இளம் பெண் முன் மண்டபத்தில் அமர்த்துழல்ர். அவரின் மடியில் ஒரு நாய் குட்டி அமர்ந்துள்ளது, இடது பக்கத்தில் இன்னொரு நாய் நிற்கிறது. ஒரு சின்ன பெண் அந்த ஓவியத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். இதுல அப்படி என்ன புதுசா இருக்குன்னு கேட்டீங்கன்னா, அந்த ஆண் கொண்டு வந்த "கடிதம்" இல்ல அது ஒரு ஸ்மார்ட்போன் போன்ற தோற்றத்தில் இருந்தது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நீலி சில ரெம்ப்ராண்ட்டைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றாள், அதில் ஒரு ஓவியத்தை பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். 2016 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் உள்ள அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது அவர் அதைக் கண்டதாகக் கூறுகிறார். அந்த ஓவியத்தில் ஐபோன் தோற்றத்தில் ஒன்று இருப்பதை பார்த்து நான் திகைத்துவிட்டேன் என்றார். அதை பார்ப்பது சற்று கடினம் தான், நான் உறுதியாக சொல்வேன் அது ஐபோன் என்று. அதுவரை ஐபோன் எப்ப, எப்படி உருவானது என்று தெரிந்துகொண்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு இனி சந்தேகமாக இருப்பதாக கூறியுள்ளார்.
ஆப்பிள் சிஇஓ இந்த கருத்தை தெரிவித்ததும், மக்கள் பலர் அது டைம் ட்ராவல் நந்திருப்பதற்கான ஆதாரமா என்று எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது நடந்து எத்தனை வருஷம் ஆச்சு, இப்ப எதுக்கு சொல்லிட்டு இருக்கோம்னு கேட்டா, அந்த போட்டோ இப்போ சோசியல் மீடியாவுல ட்ரெண்டிங்ல இருக்கு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…