Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

இன்று பூமியை கடக்கும் ஆபத்தான asteroid...இன்னும் அடுத்து 6 வெயிட்டிங்ல இருக்கு!

Priyanka Hochumin October 26, 2022 & 21:00 [IST]
இன்று பூமியை கடக்கும் ஆபத்தான asteroid...இன்னும் அடுத்து 6 வெயிட்டிங்ல இருக்கு!  Representative Image.

இன்று பூமியை நோக்கி சிறுகோள் ஒன்று வேகமாக வருவதால் விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இன்று பூமியை கடக்கும் ஆபத்தான asteroid...இன்னும் அடுத்து 6 வெயிட்டிங்ல இருக்கு!  Representative Image

உங்களுக்கு தெறியுமா? சூரிய குடும்பத்தில் இருக்கும் பூமியை சுற்றி லட்சக்கணக்கான வால்மீன்கள் (Comets), சிறுகோள்கள் (asteroids) மற்றும் விண்கற்கள் (meteors) போன்றவை சுற்றி வருகின்றன. அவற்றுள் பெரும்பாலனவை செவ்வாய் கிரகத்துக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் சூரியனை சுற்றி வரும். மேலும் சூரிய குடும்பத்தில் ஏறத்தாழ 1 லட்சத்திற்கும் அதிகமான சிறுகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவைகள் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பகால சூரிய குடும்பத்தின் உருவாக்கத்திலிருந்து எஞ்சியவையாகும்.

இவற்றுள் ஏழு சிறுகோள்கள் நம் பூமியை நோக்கி இன்று அக்டோபர் 26, 2022 ஆம் தேதி வருகிறது. நாசாவின் சிறுகோள் கண்காணிப்பு திட்டத்தின்படி, 17 மீட்டர் அகலம் கொண்ட 2022 UU1 ஆகும், இது நமது கிரகத்தை 4.17 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்லும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்று பூமியை கடக்கும் ஆபத்தான asteroid...இன்னும் அடுத்து 6 வெயிட்டிங்ல இருக்கு!  Representative Image

2016 TH94

ஏடன் குழுவிற்கு சொந்தமான இந்த சிறுகோள் 32m-71மீட்டர் அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த 2016 TH94 சிறுகோள் இன்று (அக்டோபர் 26, 2022 அன்று) 7.31 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து மணிக்கு 50400 கிமீ வேகத்தில் பறக்கும். மேலும் aster 2016 TH94 அக்டோபர் 24, 2025 அன்று திரும்பும் என்று கண்டறிந்துள்ளனர்.

இன்று பூமியை கடக்கும் ஆபத்தான asteroid...இன்னும் அடுத்து 6 வெயிட்டிங்ல இருக்கு!  Representative Image

2022 TY

இந்த சிறுகோள் 5.76 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து 18000 kmph வேகத்தில் பறந்து வரும் மற்றும் இன்று பூமியை நெருங்கும் என்று கண்டறியப்பட்டது. அப்பல்லோ குழுவைச் சேர்ந்த, சிறுகோள் 2022 TY 16m-36 மீட்டர் அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2022 UL1

விண்வெளியில் இருக்கும் இந்த சிறுகோளானது அக்டோபர் 17, 2022 அன்று கண்டறியப்பட்டது. Amor குழுவைச் சேர்ந்தது இந்த அபாயகரமான சிறுகோள் அளவு 22 மீ முதல் 48 மீட்டர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 9.76 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து 21600kmph வேகத்தில் பூமியைக் கடந்து, அக்டோபர் 26ஆம் தேதி பறக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இன்று பூமியை கடக்கும் ஆபத்தான asteroid...இன்னும் அடுத்து 6 வெயிட்டிங்ல இருக்கு!  Representative Image

2022 UA1

இதுவரை கூறப்பட்டதில், சிறுகோள் 2022 UA1 9.62 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு மிக அருகில் இருக்கிறது. டன் குழுவைச் சேர்ந்த ஒரு அபாயகரமான சிறுகோளானது 20மீ முதல் 45மீட்டர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அக்டோபர் 26, 2022 இன்று மணிக்கு 10800கிமீ வேகத்தில் நமது கிரகத்தைக் கடந்து செல்லும்.

2022 UU1

இந்த சிறுகோளால் பூமிக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமோர் குழுவிற்கு சொந்தமானது இந்த சிறுகோள் 17மீ முதல் 38மீட்டர் அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 25200kmph வேகத்தில் பயணிக்கும் 2022 UU1 அக்டோபர் 26 ஆம் தேதி 4.15 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து பூமியைக் கடந்து பறக்கும்.

இன்று பூமியை கடக்கும் ஆபத்தான asteroid...இன்னும் அடுத்து 6 வெயிட்டிங்ல இருக்கு!  Representative Image

2022 UV5

இந்த மாதம் அதிபர் 16, 2022 ஆம் தேதி அன்று கண்டறியப்பட்ட இந்த சிறுகோள் அப்பல்லோ குழுவிற்கு சொந்தமானது. இது 19 மீ முதல் 43 மீட்டர் வரை அளவு கொண்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விண்வெளிப் பாறை 4.29 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து 25200 கிலோமீட்டர் வேகத்தில் நமது கிரகத்தைக் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி பறக்கும். மேலும் மீண்டும் 2022 UV5 அக்டோபர் 24, 2023 அன்று பூமியை நோக்கி திரும்பும்.

2022 UR2

இந்த சிறுகோளும் சமீபத்தில் அதாவது அக்டோபர் 3, 2022 அன்று கண்டறியப்பட்டது. இந்த அபாயமற்ற விண்வெளிப் பாறை அப்பல்லோ குழுவிற்கு சொந்தமானது மற்றும் 30 மீ முதல் 66 மீட்டர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 9.34 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து, 28800kmph வேகத்தில், அக்டோபர் 26 அன்று நம்மைக் கடந்து பறக்கும்.

Also Read: 48,500 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த ஜாம்பி வைரஸ்.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி!!

Tag: Asteroid 2022 | Asteroid 2022 Today | Asteroid 2022 What Time | Asteroid Passing Earth Today | Asteroid Passing Earth Today Live | Asteroid Passing Earth Today 2022 | Asteroid Passing Earth 2022 | Asteroid Passing Through Earth Today | Asteroid Passing Earth Today Live 2021 | Asteroid Passing Earth Today Live 2022 Time | Asteroid Passing Earth Today Nasa | Asteroid Passing Earth Today Time India |.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்