Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,603.00
-249.94sensex(-0.34%)
நிஃப்டி22,325.80
-76.60sensex(-0.34%)
USD
81.57
Exclusive

கேம் பிரியர்களுக்கு குட் நியூஸ்...Ban செய்யப்பட்ட BGMI கேம் இப்ப வந்தாச்சு | BGMI Game Returns

Priyanka Hochumin Updated:
கேம் பிரியர்களுக்கு குட் நியூஸ்...Ban செய்யப்பட்ட BGMI கேம் இப்ப வந்தாச்சு | BGMI Game ReturnsRepresentative Image.

கேமர்களுக்கு ஒரு நற்செய்தி, "BGMIக்கான closed test track அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த கேம் அதிகாரப்பூர்வமாக லான்ச் ஆவதற்கு முன்னர் விளையாட விரும்புவர்கள் Play Storeக்கு சென்று டவுன்லோட் செய்து விளையாடலாம்" என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BGMI கேம்

ரசிகர்கள் மத்தியில் BGMI என பிரபலாமான கேம் Battlegrounds Mobile India என்று அழைக்கப்படுகிறது. இது தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. ஒரு சில நேரங்களில் பயனர்கள் ஆப் ஸ்டோர் மூலம் பட்டியலை நேரடியாகக் கண்டறிய முடியாமல் போகலாம். அதற்கும் ஒரு வழி உள்ளது, BGMI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று Play button-ஐ கிளிக் செய்தால் டவுன்லோட் பக்கத்திற்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள். அங்கே இருந்து கேமை இலவசமாக நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இருப்பினும் இந்த கேம் தற்போது iOS பயனர்களுக்கு கிடைக்காது. மேலும் வரும் நாட்களில் கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது. சில தொழில்நுட்பம் காரணமாக இந்த கேமை பதிவிறக்கம் செய்ய முடியாமல் பயனர்கள் தவிக்கிறனர். அந்த பிரச்சனை கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்று நிறுவனம் கூறியது.

Ban செய்யப்பட காரணம்?

கடந்த ஆண்டு Apple App Store மற்றும் Google Play Store இலிருந்து BGMI பாதுகாப்பு காரணங்களுக்காக நீக்கப்பட்டது. BGMI இன் முந்தைய மறு செய்கையான PUBG மொபைல், இதேபோன்ற பாதுகாப்பு காரணங்களுக்காகவும் சீனாவுடனான இணைப்புகளுக்காகவும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. பல சந்தற்பங்களுக்கு பிறகு இந்திய அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் BGMI கேம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருகிறது.

1. விளையாட்டிற்கு இளைஞர்கள் அடிமையாகாமல் இருக்க கால வரம்பை சேர்க்குமாறு டெவலப்பரிடம் அரசாங்கம் கேட்டுள்ளது.

2. BGMI அதன் UI (யூசர் இன்டர்பேஸ்) இந்திய பார்வையாளர்களுக்குப் பொருத்தமானதாக மாற்றியமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆனால் கேம் தடை செய்யப்படுவதற்கு முன்பே, கிராஃப்டனின் BGMI ஏற்கனவே இந்திய பயனர்களுக்கு ஏற்றதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்திய பயனர்களின் தரவைப் பாதுகாப்பதற்காக மைக்ரோசாஃப்ட் அஸூர் நிறுவனத்துடன் ஒரு கூட்டாண்மையையும் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் Krafton India CEO Sean Hyunil Sohn "Battlegrounds Mobile India (BGMI) செயல்பாட்டை மீண்டும் தொடங்க அனுமதித்த இந்திய அதிகாரிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். Battlegrounds Mobile India விரைவில் பதிவிறக்கம் செய்யப்படும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் உங்களை மீண்டும் எங்கள் தளத்திற்கு வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்" என்றும் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்