New Changes in Tech: ஒவ்வொரு ஆண்டும் பல முக்கிய விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன. அந்த ஜூன் 1, 2022 அதாவது இன்று முதல் தொழில்நுட்ப உலகத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளத். இந்த முக்கிய மாற்றங்களால் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படலாம்.
ஒவ்வொரு ஆண்டும் பயனர்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காவும் பல சேவைகள் நிறுத்தப்படுகின்றன. எனவே, இந்த மாற்றங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மக்களே. அதாவது, இன்று முதல் 4 முக்கிய மாற்றங்கள் டெக் துறையில் அரங்கேறவுள்ளது. அதாவது, டெக் ஜாம்பவான் கூகுள் உடனான சில சேவைகள் நிரந்தரமாக மூடப்படுகிறது.
அந்த வகையில், ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான "இண்டர்நெட் எக்ஸ்புளோரர்" உலாவி ஜூன் மாதத்தில் இன்றிலிருந்து நிரந்தரமாக நிறுத்தப்படவுள்ளது. அதேபோல், ஆப்பிள் மற்றும் அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களின் சில சேவைகளை நிறுத்தப்படுகிறது. ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. இப்போது இன்று முதல் நடக்கும் நான்கு மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏடிஎம்களில் பணம் எடுப்பதலில் மாற்றம்:
ஹாப்பி நியூஸ்... இனி மக்கள் டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம் களிலிருந்து பணம் எடுக்க முடியும். இதற்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி சமீபத்தில் தான் வெளியிட்டது. அதாவது, ஜூன் 1,2022 முதல் பயனர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் இல்லாமலே ஃபோன் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இது ஸ்மார்ட்போன்களை மட்டுமே பயன்படுத்தி எடுக்க முடியும்.
இனி இதெல்லாம் அமேசானில் வாங்க முடியாது:
மிகவும் பிரபலமான இ-காமர்ஸ் தளமான Amazon இலிருந்து பல்வேறு விதமான பொருட்களை வாங்கலாம். அதேபோல் அமேசானில் மின் புத்தங்களும் ரொம்ப நல்லாவே விற்பனையாகி வருகின்றன. இருந்தாலும், என்ன காரணமென்று தெரியவில்லை இன்று முதல் இந்த ஆன்லைன் ஷாப்பிங் தளத்திலிருந்து வாடிக்கையாளர்கள் மின் புத்தகங்களை வாங்க இயலாது. அடுத்த மாதம் முதல், ஆண்ட்ராய்டு செயலி பயன்படுத்துவர்கள் அமேசானில் இருந்து இந்த புத்தங்களை வாங்க இயலாது. இதற்கு காரணம் கூகுள் நிறுவனத்தின் புதிய பிளே ஸ்டோர் கொள்கையே. அதேபோல், மேலும், Apple App Store பில்லிங் கொள்கைகளுக்கு இணங்க, iOS சாதனங்களில் இருந்து டிஜிட்டல் புத்தகம் வாங்கும் ஆதரவை 2011 இல் Amazon நீக்கியது குறிப்பிடத்தக்கது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூடப்படும்:
ஒரு காலத்தில் பிரபலமான உலாவியாக இருந்து வந்ததுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர். ஆனால், இப்போது இதை அதிகமாக பயனர்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த பிரவுசரின் பயன்பாடு குறைந்து வருவதால் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜூன் 15க்குப் பிறகு Internet Explorer நிரந்தரமாக நிறுத்தப்படும். தற்போது Google Chrome, Microsoft Edge மற்றும் Mozilla Firefox போன்ற புதிய உலாவிகளை தான் பயனர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. இருந்தாலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை இன்னும் நம்பியிருக்கும் நபர்களுக்கு இது வருத்தத்தை ஏற்படுத்தலாம்.
கார்டு பயன்பாட்டை ஆப்பிள் நிறுத்துகிறது:
இன்று முதல் ஆப்பிள் அதன் சில விதிகளை மாற்றியுள்ளது. அந்த வகையில், இன்றிலிருந்து இந்தியாவில் உள்ள பயனர்கள் ஆப்பிள் ஐடியை பயன்படுத்தி சந்தாக்கள் மற்றும் பயன்பாடுகளை வாங்க கார்டைப் பயன்படுத்த முடியாது. அதாவது, இந்திய வாடிக்கையாளர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்ஸ்களை வாங்க முடியாது. அதேபோல், iCloud + மற்றும் Apple Music போன்ற Apple போன்ற தளங்களிலும் சந்தாக்களை இந்திய அட்டைகள் மூலம் பணம் செலுத்த முடியாது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…