Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதிபயங்கர 'பிளாக் ஹோல்' இம்புட்டு நாளா தெரியாம போச்சே! பூமிக்கு ஆபத்தா...

Priyanka Hochumin November 11, 2022 & 13:00 [IST]
பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதிபயங்கர 'பிளாக் ஹோல்' இம்புட்டு நாளா தெரியாம போச்சே! பூமிக்கு ஆபத்தா...Representative Image.

விண்வெளியை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளுக்கு இப்படி ஒரு அதிர்ச்சி இதுவரை ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பூமிக்கு தொலைவில் ஏதேனும் "கருந்துளை" (Black hole) இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்த விஞ்ஞானிகள் பூமிக்கு பக்கத்துலையே மறைந்திருந்த பிளாக் ஹோல் தென்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதிபயங்கர 'பிளாக் ஹோல்' இம்புட்டு நாளா தெரியாம போச்சே! பூமிக்கு ஆபத்தா...Representative Image

ஜெர்மனியில் உள்ள 'மேக்ஸ் ப்ளான்க்' என்ற அறிவியல் ஆய்வகத்தில் உள்ள விஞ்ஞானிகள் எதேர்ச்சியாக டெலெஸ்கோப் வழியாக பூமிக்கு அருகே அமைந்திருந்த நட்சத்திரக் கூட்டங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் மிகவும் படர்ந்த பிளாக் ஹோல் ஒன்று தென்பட்டது. இவ்வளவு பெரிய பிளாக் ஹோல் இத்தனை ஆண்டுகளாக எப்படி விஞ்ஞானிகள் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருந்திருக்க முடியும் என்று குழப்பத்தில் இருக்கின்றனர். சரி இப்ப இந்த பிளாக் ஹோலினால் பூமிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? போன்ற விவரங்களை பாப்போம்.

பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதிபயங்கர 'பிளாக் ஹோல்' இம்புட்டு நாளா தெரியாம போச்சே! பூமிக்கு ஆபத்தா...Representative Image

முதல்ல பிளாக் ஹோல் என்றால் என்ன? தெரிஞ்சிக்கலாமா. விளக்கமா சொல்லனும்னா சொல்லிகிட்டே போலாம், ஆனா நமக்கு அதெல்லாம் தேவையில்லை. சிம்பிளா சொல்லனும்னா நட்சத்திரங்கள் தங்கள் அந்திமக் காலத்தில் வெடித்து சிதறும் போது உருவாவதுதான் 'பிளாக் ஹோல்'. அவை நட்சத்திரங்களின் அளவைக் கொண்டு மாறுபடும். இப்போது சிறிதாக இருந்தால் அதனை "ஸ்டெல்லர் பிளாக் ஹோல்" என்றும், சூரியனை விட பல்லாயிரம் மடங்கு பெரிதாக இருந்தால் அதனை "சூப்பர் மேசிவ் பிளாக்ஹோல்" என்றும் அழைக்கப்படும். இப்படி நம்முடைய கேலக்சியில் மட்டும் சுமார் 100 மில்லியன் பிளாக் ஹோல்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதிபயங்கர 'பிளாக் ஹோல்' இம்புட்டு நாளா தெரியாம போச்சே! பூமிக்கு ஆபத்தா...Representative Image

இப்படி பிளாக் ஹோல் உருவாவதால் நமக்கு என்ன பிரச்சனை வரப்போகுது என்று கேட்டால்? நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது அது வெற்றிடமாக மாறுகிறது. அதனுடைய ஈர்ப்பு விசை கணக்கிட முடியாத அளவுக்கு இருக்கும். அதனால் ஏதேனும் பிளாக் ஹோலின் குறிப்பிட்ட தொலைவில் செல்லும் எந்தப் பொருளாக இருந்தாலும் சரி அப்படியே விழுங்கிவிடும். அப்படியென்றால் நீங்கள் யோசித்து பாருங்க, எவ்ளோ பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் சரி அப்படியே உள்ள போகும் போது நம்முடைய பூமி இந்த பிரபஞ்சத்தில் ஒரு சின்ன புள்ளி மாறி அது உள்ள போகாத.

பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதிபயங்கர 'பிளாக் ஹோல்' இம்புட்டு நாளா தெரியாம போச்சே! பூமிக்கு ஆபத்தா...Representative Image

விஞ்ஞானிகள் பூமிக்கு அருகில் கண்டறியப்பட்ட இந்த பிளாக் ஹோலுக்கு Gaiha BH 1 என பெயரிட்டுள்ளனர். இது சூரியனை விட 10 மடங்கு பெரிதாக இருக்கிறதாம். மேலும் பூமியில் இருந்து 1300 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதற்கு அருகில் நம்முடைய சூர்யன் அளவு போன்ற ஒரு நட்சத்திரம் சுற்றிவருவதாகவும், அது இந்த பிளாக் ஹோலால் ஈர்க்கப்பட்டு மெல்ல மெல்ல அதனால் விழுங்கப்பட்டு தயாராக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது வரை இந்த பிளாக் ஹோலால் நம்முடைய பூமிக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரிய குடும்பத்தில் இருக்கும் பூமியை விழுங்குவதற்கான தூரம் அதிகமாக இருப்பதால் இந்த பிளாக் ஹோலால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் திட்டவட்டமாக கூறுகின்றனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்