Sun ,Sep 24, 2023

சென்செக்ஸ் 66,009.15
-221.09sensex(-0.33%)
நிஃப்டி19,674.25
-68.10sensex(-0.34%)
USD
81.57
Exclusive

இனி ரோப்போ தான் கோர்ட்டில் வழக்கறிஞர் ஆமாம்...! | AI Robot Lawyer

Manoj Krishnamoorthi Updated:
இனி ரோப்போ தான் கோர்ட்டில்  வழக்கறிஞர் ஆமாம்...! | AI Robot LawyerRepresentative Image.

உலகமே இனி இயந்திர மையம் தான் என்பது ரொம்ப தூரம் இல்லை. என்ன குழப்பமா இருக்கிறதா... 2023 இல் நாம் யாரும் எதிர்பார்க்காத இடத்தில் ரோப்போட்கள் இருக்கும் என்பது உண்மை ஆகும். அதிக மனிதர் புழங்கும் அந்த முக்கியமான இடத்தில் AI Robot வரவுள்ளது. மனிதர்களை போல இயங்கும் AI Robot எங்கு அறிமுகம் செய்ய உள்ளது என்பதை அறிய இந்த பதிவை பின்பற்றவும். 

2023 இல் நீதிமன்றத்தில் AI Robot வழக்கறிஞராக அறிமுகமாக உள்ளது. இனி AI Robot மக்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடும் என்பது ஆச்சரியமாக தான் இருக்கும். மனித வரலாற்றில் இதுவரை யாரும் நம்பாத நிகழ்வாக இந்த AI Robotயின் அறிமுகம் இருக்கும், அடுத்த மாதத்தில் நீதிமன்றத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இனி ரோப்போ தான் கோர்ட்டில்  வழக்கறிஞர் ஆமாம்...! | AI Robot LawyerRepresentative Image

AI Robot Lawyer

DoNotPay யின் AI Robot பிப்ரவரி மாதத்தில் இருந்து நீதிமன்றத்தில் குற்ற வழக்குகளை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த AI Robot நமக்கு வழக்கறிஞர் அளிக்கும் சட்ட ரீதியான தகவலைக் கொடுக்கும். எனவே, இதுவே முதல் AI Robot Lawyer என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாதிரி AI Robot தொழில்நுட்பம் சீனாவிலும் உள்ளது எனவும் கூறப்படுகிறது.  

நம்முடைய மொத்த வாதங்களையும் AI Robo Lawyer கவனிக்கும். அதன் பின்னர் தேவையான பிரிதி வாதங்களை DonotPay ஸ்மார்ட்போன் ஆப் மூலம் வெளிப்படுத்தும்.  2015 இல் உருவாக்கப்பட்ட இந்த AI பிரட்டனில் பார்க்கிங் டிக்கட் வழக்குகளை பார்க்க உபயோகிப்பட்டுள்ளது. 

AI Robot Lawyer மூலம் மக்கள் எளிமையாக தங்கள் பிரச்சனையை எளிதில் தீர்த்து கொள்ளலாம் என நம்பப்படுகிறது.  ஆனால் ஒருபுறம் இது வழக்கறிஞர்களின் இடத்தை பூர்த்தி செய்தாலும் வழக்கறிஞர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து AI Robot Lawyer உருவாக்கிய Joshua Browder வழக்கறிஞர் அதிகமான கட்டணம் பெறுவதும் சரியாக மக்களுக்கு வாதாடாமல் இருந்தது இதன் கண்டுபிடிப்பு காரணம் ஆகும். தகுதியான வழக்கறிஞர்கள் இதை சமாளிப்பர் எனக் கூறியுள்ளார். என்ன இருந்தாலும், நிச்சயம் ஒருநாள் AI மனிதர்களின் இடத்தை பிடிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்