Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

ட்விட்டரை வாங்கிய உடனே...CEO பராக் அகர்வாலை பணி நீக்கம்...செய்து Elon Musk அதிரடி!

Priyanka Hochumin October 28, 2022 & 10:00 [IST]
ட்விட்டரை வாங்கிய உடனே...CEO பராக் அகர்வாலை பணி நீக்கம்...செய்து Elon Musk அதிரடி!Representative Image.

பல சர்ச்சைகளுக்கு பிறகு ஒரு வழியாக ட்விட்டரை தன் வசப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க். தன் கைக்கு வந்ததும் அவர் செய்த முதல் விஷயத்தால் தொழில்நுட்ப வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்கா டாலர் கொடுத்த வாங்க முயிடவு செய்தார். பின்னர் வாங்க எனக்கு விருப்பம் இல்லை, இதை கை விடுகிறேன் என்றார். இவரின் இந்த விளையாட்டால் ட்விட்டர் நிறுவனத்திற்கும், மஸ்கிற்கும் இடையே அசாதரணமான சூழல் இருந்தது. பிறகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இன்று மாலை 5 மணி வரைக்கும் தான் நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் இந்த டீலை முடிக்க வேண்டும், இல்லை என்றால் அது நிராகரிக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று கை கழுவும் தொட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு ட்விட்டர் அலுவலகத்திற்குள் மஸ்க் செல்லும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பிறகு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 'நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன். அது மூழ்கட்டும் (Let that sink in!)' என்று பதிவிட்டிருந்தார். இதற்குள் ஆயிரம் அர்த்தம் இருப்பதாக பலரும் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செய்த முதல் வேலை!

ட்விட்டரை தன்னுடைய கன்ட்ரோலுக்கு கொண்டு வந்த உடனே அவர் செய்த விஷயம் - ட்விட்டர் CEO பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்துள்ளார். அவர் மட்டும் இன்றி ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். இந்த தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து எலான் மஸ்க் அல்லது ட்விட்டர் தரப்பில் இருந்து யாரும் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

மாற்ற விரும்பும் விஷயங்கள்

ட்விட்டரை வாங்கிய பிறகு சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று மஸ்க் முன்பே கூறியிருந்தார். அதைப் பற்றி சற்று சுருக்கமாக பார்க்கலாம்.

கருது சுதந்திரம் - உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துகள் போன்றவற்றை தெரிவிக்கும் ட்விட்டர் கணக்குகளை முடக்க நேரிடும். இது முற்றிலும் தவறு ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கும் சுதந்திரத்தை வழங்கும் விதமாக ட்விட்டர் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

முன்னிலை - பயனர்களுக்கு எந்தெந்த ட்வீட்களை முன்னிலை படுத்தி காண்பிக்க வேண்டும் என்னும் அல்கோரிதத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும்.

எடிட்டிங் - மற்ற சோசியல் மீடியாவில் இருப்பது போல எடிட்டிங் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்.

பாட் - தனி நபர் இல்லது சாப்ட்வேர் மூலம் இயக்கப்படும் ட்விட்டர் பாட் (Bot) கணக்குகளை நீக்குவது.

ப்ளூ டிக் - பிரபலங்களின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கு மட்டும் அளிக்கப்பட்ட ப்ளூ டிக் உரிமையை அனைத்து ட்விட்டர் கணக்குகளுக்கு  அளிப்பது போன்ற பல மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.

இவரின் இந்த மாற்றங்களால் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. இனி ட்விட்டரில் நிகழப்போகும் மாற்றங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்