Tue ,Oct 03, 2023

சென்செக்ஸ் 65,828.41
320.09sensex(0.49%)
நிஃப்டி19,638.30
114.75sensex(0.59%)
USD
81.57
Exclusive

பிளிப்கார்ட்டில் ஆரம்பிக்கிறது Big Savings Day Sale...ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை!

Priyanka Hochumin Updated:
பிளிப்கார்ட்டில் ஆரம்பிக்கிறது Big Savings Day Sale...ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை!Representative Image.

உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் பிளிப்கார்ட் வரும் மே 5 ஆம் தேதி முதல்  Big Savings Day Sale 2023-ஐ கொண்டாடுகிறது. மே 5 தொடங்கி மொத்தம் ஆறு நாட்கள் அதாவது மே 10 ஆம் தேதி வரை சேல் நடைபெறும். இதில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அது என்னென்ன மாடல் மற்றும் சலுகை விலை என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம். இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்ட டீசர் பக்கத்தில் iPhone 13, Samsung Galaxy F14 5G, Realme C55, Pixel 6a மற்றும் பல போன் மாடல்களுக்கு சலுகை தரப்பட்டுள்ளது.

அதில் சில மாடல்களின் தள்ளுபடி விலை தற்போது வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில்,

Pixel 6a - ரூ. 25,999/-

Realme GT Neo 3T - ரூ. 19,999/-

Poco X5 Pro - ரூ. 20,999/-

Realme 10 Pro+ - ரூ. 22,999/-

Realme C55 - ரூ. 7,999/-

Moto e13 - ரூ. 7,499/-க்கும் விற்பனைக்கு வருகிறது.

மேலும் ஐபோன் 13 மாடல் போனின் சலுகை குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் பிளிப்கார்ட் Big Savings Day Sale இல் கட்டாயமாக ஐபோன் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என்பதை நிறுவனம் உறுதி படுத்தியுள்ளது.

குறைந்த விலை மட்டும் அல்லாது வங்கிச் சலுகைகள், எக்ஸ்சேஞ் ஆஃபர் மற்றும் நோ-காஸ்ட் EMI விருப்பம் போன்ற கூடுதல் சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் Flipkart Plus Membership வைத்திருக்கும் நபர்கள் சேல் ஆரம்பிப்பதற்கு முந்தைய நாளே அணுக முடியும். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் அளிக்கப்படும். Paytm பயன்படுத்தினால் ரூ.100/- கேஷ் பேக் வழங்கப்படும். மேலும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 5% அன்லிமிடெட் கேஷ் பேக் தரப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்