Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

Fun Facts About Technology: இதெல்லாம் நிஜமாவே உண்மையா பங்கு...அப்டி மட்டும் இருந்துச்சுன்னா...வேற லெவல் தான்!

Priyanka Hochumin November 21, 2022 & 12:00 [IST]
Fun Facts About Technology: இதெல்லாம் நிஜமாவே உண்மையா பங்கு...அப்டி மட்டும் இருந்துச்சுன்னா...வேற லெவல் தான்! Representative Image.

நம்முடைய பூமியில் டெக்னாலஜி புரட்சியடைந்த அளவிற்கு மிகவும் வேகமாகவும் அதிகமாகவும் வேற எந்த புரட்சியும் நடந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு மனிதர்களை மாற்ற வைத்த தொழில்நுட்பத்தில் நடந்திருக்கும் பல வினோதமான, சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

மூளக்காரன் தான்!

உலகின் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் அனைவரும் மூளைக்காரர்கள் என்று நிரூபித்துள்ளனர். தங்களின் நிறுவன வளாகத்தில் ஒவ்வொரு முறையும் சுமார் 200 ஆடுகளை வாடகைக்கு வாங்கி ஒரு வாரம் உலாவ விடுவார்களாம். ஏனெனில் புல் வெட்டும் இயந்திரம் எவ்வளவு விலை இருக்குமோ அதே அளவு தான் ஆடுகளுக்கு ஆகும். எனவே, நேரடியாக ஆடுகளையே புற்களை சாப்பிட விட்டால் ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என்று கருதுவதாக கூறுகின்றனர்.

என்னது 8 மணி நேரமா?

1826 மற்றும் 1827 க்கு இடையில் Nicéphore Niépce என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு "லீ கிராஸில் உள்ள ஜன்னலிலிருந்து பார்வை" என்ற தலைப்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த புகைப்படத்தை உலகின் ஆரம்பகால புகைப்படம் என்று கூறப்படுகிறது. அந்த கால கட்டத்தில் இருந்த தொழில்நுட்ப வரம்புகள் காரணமாக, அதை வெளிப்படுத்த 8 மணிநேரம் ஆனது. ஒரு புகைப்படத்தை உருவாக்க நீண்ட நேரம் எடுத்ததால், பெரும்பாலான மக்கள் பழைய புகைப்படங்களில் புன்னகைக்க வேண்டாம் என்று தேர்வு செய்தனர். ஏனெனில் அவர்கள் 8 மணி நேரம் வரை அசையாமல் சிரித்துக் கொண்டே இருப்பது கடினம். 

என்னது கடந்த காலத்தில் தான் வாழறோமா?

நீங்கள் தற்போது அனுபவிக்கும் அனைத்தும் உண்மையில் 80 மில்லி விநாடிகளுக்கு முன்பு நடந்தது. பேய்லர் மருத்துவக் கல்லூரியில் டாக்டர். டேவிட் ஈகிள்மேன் நடத்திய ஆய்வில், நமது உணர்வு உண்மையான நிகழ்வுகளை விட 80 மில்லி விநாடிகள் பின்தங்கியிருப்பதாகக் கண்டறிந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்