Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

கூகுளில் இருந்து AI காட்ஃபாதர் வெளியேறுகிறார்....அதற்கு இது தான் காரணமா?

Priyanka Hochumin Updated:
கூகுளில் இருந்து AI காட்ஃபாதர் வெளியேறுகிறார்....அதற்கு இது தான் காரணமா?Representative Image.

செயற்கை நுண்ணறிவு [அதாவது AI] என்னும் மிக முக்கிய கண்டுபிடிப்பின் காட்ஃபாதரான ஜெஃப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களின் நரம்பியலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்கும் தருணங்களில் எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து அதனை செயற்கையாக செயல்படுத்துவது எப்படி என்ற யோசனை ஜெஃப்ரி ஹிண்டனுக்கு தோன்றியது. பின்னர் அதனைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதனால் தான் இவரை செயற்கை நுண்ணறிவின் "காட்ஃபாதர்" என்று அழைக்கப்படுகிறார்.

சரி, இவ்வளவு சாதனைகளை படைத்த ஜெஃப்ரி ஹிண்டன் ஏன் கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு அவரே விளக்கமும் அளித்துள்ளார். "நான் இந்த AI கண்டுபிடிப்பை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தில் பார்ட் டைமராக வேலை செய்துள்ளேன்.

AI கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கமே செயற்கை நுண்ணறிவு மனிதர்களுடன் சேர்ந்து அவர்கள் கேட்பதை செய்து தருவதற்காக உருவாக்கப்பட்டது. தற்போது வரை அப்படி தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் இது அப்படியே இருக்குமா என்று கேட்டால்? நிச்சயம் கிடையாது. கூடிய விரைவில் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடித்ததற்கான காரணங்களை தாண்டி அதன் பயன்பாடு இருக்கும். மனிதர்களை விட அதிக திறன் மற்றும் அறிவை பெரும் காலம் தொலைவில் இல்லை. அப்படி ஒரு காலம் வரும் போது, இந்த கருவி நாசக்காரர்கள் கையில் சிக்கினால் என்ன ஆகும் என்று யோசித்து பார்த்தீர்களா?

தற்போது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த இடத்தில் இந்த கண்டு பிடிப்பு இருக்கிறது. இதுவே ரஷ்யாவிடம் இந்த கருவி கிடைத்தால் என்ன நடக்கும்? என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் எனக்கு 75 வயதாகி விட்டது, இனியும் என்னால் ஆக்ட்டிவாக பணியாற்ற முடியும் என்று தோன்றவில்லை. நான் ஓய்வு எடுக்கும் காலம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்