Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கம்ப்யூட்டர்-ல இது தெரியாம...இத்தனை வருஷமா வேலை செஞ்சீங்கனா...அதை விட அசிங்கம் எதுவும் இல்ல!

Priyanka Hochumin August 08, 2022 & 11:15 [IST]
கம்ப்யூட்டர்-ல இது தெரியாம...இத்தனை வருஷமா வேலை செஞ்சீங்கனா...அதை விட அசிங்கம் எதுவும் இல்ல!Representative Image.

தற்போது எந்த வேலையாக இருந்தாலும் பெரும்பாலும் கம்ப்யூட்டர் துணையுடன் இல்லாமல் இருக்காது. அந்த வகையில் அதில் நீங்கள் பிகினர் அல்லது எக்ஸ்பீரியன்ஸாக இருந்தாலும் சரி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பற்றி தற்போது பார்ப்போம். அதாவது நாம் முக்கிய டேட்டாக்களை என்ட்ரி செய்து வைக்க கூகுள் ஷீட்ஸ் என்னும் செயலியை பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்த நீங்கள் பெரிய டானாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் இது கூட தெரியாமல் இருந்தால் சற்று அசிங்கமாகிவிடும். எனவே, cut, copy, paste போன்ற அப்ப சப்பையான ஷார்ட் கட்டை சொல்லி உங்களை கடுப்பேத்த விரும்பவில்லை. இதோ முக்கிய google sheets இன் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்.

1. எப்படி Hyperlink-ஐ ஓபன் செய்வது?

நாம் ஒருவருக்கு reference ஆக சில வெப்சைட்டின் லிங்க்-ஐ இந்த ஷீட்டில் பதிவு செய்திருப்போம். ஆனால் அதனை ஓபன் செய்ய, Alt + Enter என்னும் ஈஸி ஷார்ட் கட்டை பயன்படுத்தலாம்.

2. Row-வை செலக்ட் செய்வது எப்படி?

Word Document இல் செலக்ட் செய்வது போல எளிமையாக google sheets இல் ஒரு Row-வை கர்சர் பயன்படுத்தி செலக்ட் செய்ய முடியாது. அதற்கு நீங்க அப்படி செலக்ட் செய்ய ஒவ்வொரு செல்லாக தேர்தெடுக்க வேண்டும். இதற்கு பதிலாக Shift + Spacebar என்கிற ஷார்ட் கட்டை பயன்படுத்தி பாருங்கள்.

3. மேலே or கீழே ஒரு Row-வை எப்படி Insert செய்வது?

நீங்கள் வேகமாக வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு தரவை என்ட்ரி போட மறந்திருப்பீர்கள். அப்பொழுது அதனை ஒரு Row-வாக இடையில் சேர்க்க ஒரு எளிமையான வழி உள்ளது. நீங்கள் எந்த செல்லுக்கு மேல் அல்லது கீழ் ஒரு Row-வை insert செய்ய வேண்டுமோ அதனை செலக்ட் செய்யவும். பிறகு Alt + I + R மற்றும் Alt + I + W என்னும் ஷார்ட் கட் கீயை உபயோகிக்கலாம்.

4. New Sheet-ஐ Add செய்ய என்ன பண்ணனும்?

நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஷீட்டில், ஒரு குறிப்பிட்ட டேட்டாக்களை என்ட்ரி செய்து வருவீர்கள். அதில் மற்றொரு புது தரவுகளை என்ட்ரி செய்ய புது எக்ஸெல் ஷீட் ஓபன் செய்வதற்கு Shift + F11 கீயை யூஸ் செய்யுங்கள்.

5. எப்படி Values-ஐ மட்டும் paste செய்வது?

ஒவ்வொரு value-வாக காப்பி செய்து பேஸ்ட் செய்யாமல், அனைத்து Value-க்களையும் ஒரே Cell இல் பேஸ்ட் செய்யலாம். அதற்கு எந்தெந்த Cell-களில் Value-க்களை பேஸ்ட் செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து பின்பு Ctrl + Shift + V என்பதை கிளிக் செய்யவும்.

6. Link-ஐ Insert செய்வது எப்படி?

நீங்கள் ஒரு link-ஐ google sheet இல் சேர்க்க, Ctrl + K என்னும் ஷார்ட் கட் கீயை பயன்படுத்துங்கள். நீங்கள் ஒரு செல்லை செலக்ட் செய்து பின்பு Ctrl + K அழுத்திய உடன் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். பிறகு அதில் எந்த லிங்கை insert செய்ய வேண்டுமோ அதனை பேஸ்ட் செய்யுங்கள்.

7. Formatting-ஐ Clear செய்யும் வழிமுறை

ஒரு செல்லில் பயன்படுத்தப்பட்ட Formatting-ஐ Ctrl + என்னும் ஷார்ட் கட் மூலம் நீக்க முடியும்.

8. Next Sheet-க்கு எப்படி Move ஆவது?

அடுத்த ஷீட்டிற்கு விரைந்து செல்ல Ctrl + Shift + Page Down பட்டனை அழுத்தி எளிதாக அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். அதே போல் முந்தைய ஷீட்டிற்கு செல்வதற்கு Ctrl + Shift + Page Up என்பதை கிளிக் செய்யவும்.

9. Formula-வை காண்பது எப்படி?

கணக்கு சம்மந்தப்பட்ட பல formula-வை பயன்படுத்தி calculation போடுபவர்கள் அதிகம். அந்த வகையில் அது என்ன formula என்பதை தெரிந்துகொள்ள Ctrl என்பதை மட்டும் அழுத்தினாள் போதும்.

10. Fill Down செய்வது எப்படி?

கீழே உள்ள cell-களை Ctrl + D என்னும் சோர்ட் கட் கீயை பயன்படுத்தி fill செய்யலாம்.

11. ஒரு Row-வை delete செய்வது எப்படி?

ஒரு row-வை டெலீட் செய்ய விரும்பினால் Ctrl + Alt + - என்பதை தேர்வு செய்தாலே போதுமானது.

12. Last Action-ஐ எப்படி Repeat செய்வது?

Google Sheet இல் முன்பு செய்து கொண்டிருந்த வேலையை மீண்டும் செய்ய விரும்பினால் வெறுமனே F4-ஐ பிரெஸ் செய்யவும்.

13. Fill Right செய்வது எப்படி?

உங்களின் வலது பக்கத்தில் உள்ள cell-களை fill செய்ய Ctrl + R என்ற கீயை பயன்படுத்தி பாருங்கள். 

Google sheets shortcuts, google sheets shortcut keys, google sheets shortcut insert row above, google excel sheet shortcut keys, google sheet wrap shortcut key, google sheet remove short cut key, google sheets short url, tips and trick for excel in tamil, google sheets shortcuts in tamil.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்