WhatsApp : சமூக தொழில்நுட்ப செயலியான வாட்ஸப்பில் பல வசதிகளை அறிமுகபடுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்போன் வளர்ச்சியால் மக்களிடையே செயலி முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில், அடிக்கடி மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப வாட்ஸப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் செய்து வருகிறது.
அதன்படி, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் உள்ளது போல வாட்ஸப்பிலும் எமோஜி ரியாக்சன்களை அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, தற்போது டெலிகிராம் போல வாட்ஸப்பில் அதிகபட்சம் 2 ஜிபி அளவு கொண்ட ஃபைல்களை அனுப்பும் வசதியை வாட்ஸப் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,.
மேலும், வாட்ஸப் குரூப்களில் இணையும் நபர்களின் எண்ணிக்கையை 512 ஆக உயர்த்தியுள்ளது. முன்பு 256 பேர் மட்டுமே ஒரு வாட்ஸப் குழுவில் இணைய முடியும். அதை மாற்றியுள்ளது. மேலும், வாட்ஸப் வாய்ஸ் சாட்டில் 36 பேர் வரை இணைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த வசதியை பயன்படுத்த வேண்டும் என்றால் வாட்ஸப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…