தீபாவளியை கொண்டாடும் நீதிகள் நெருங்க நெருங்க நம்மை அறியாமல் ஒரு சந்தோஷம் நம்முள் தோன்றும். அதை வெளிப்படுத்த நிறைய வழிகள் இருக்கும். இப்படி இந்த தீபாவளிக்கு வித்தியாசமா ஏதாவது செய்யலாம் என்று நீங்கள் பிளான் பண்ணிருப்பீங்க. ஆனா நம்ப கூகுள் ரொம்பவே வித்தியாசமா நமக்கு சர்பிரைஸ் கொடுத்திருக்கு. பொதுவா கூகுள் இந்த உலகத்தில் இருக்கும் எல்லா பண்டிகை நாட்களை கொண்டாட்டம் விதமாக அன்றைக்கு புதுமையாக எதாவது வைத்திருப்பார்கள்.
அப்படி தான் நம்முடைய தீபாவளி பண்டிகைக்கு ரொம்பவே புதுமையா தனித்துவமா ஒரு விஷயம் பண்ணிருக்காங்க. அதை பார்க்கும் போது நம்மை அறியாமல் முகத்தில் ஒரு சந்தோசம், புன்னகை வரும். அதை எங்க பாக்குறது, என்னது என்று பார்க்கலாம் வாங்க.
உங்களின் போன், லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் போன்றவற்றில் கூகுள் சர்ச் பேஜ்ல தான் இருக்கு. அதை எப்படி பாக்குறதுன்னா? நீங்க சர்ச் பாரில் diwali அல்லது diwali 2022 என்று டைப் பண்ணுங்க. அதுக்கான சர்ச் ரிசல்ட் பேஜ் வரும். அதுல நம்ப என்னைக்கு தீபாவளி கொண்டாடப்படும் என்று நாள், கிழமை ஆகிய தகவல்கள் தோன்றும்.
அதற்கு பக்கத்தில் ஒரு மினுமினுப்பான அகல் விளக்கு ஜொலித்துக் கொண்டே குதிச்சிட்டு இருக்கும். இப்போ நீங்க அதை கிளிக் பண்ணா, ஷ்கிரீன் முழுக்க விளக்கு தோன்றும். இப்போ நீங்க கிளிக் செய்த விளக்கு, கர்சரா மாறும், அதை வைத்து மற்ற விளக்குகளை நீங்கள் ஏற்றலாம். எல்லா விலகும் ஏற்றிய பிறகு ஷ்கிரீன் முழுக்க ஜொலித்துவிட்டு மீண்டு பழைய நிலைக்கு திரும்பிவிடும்.
இதை நீங்கள் செய்யும் போது உங்கள் முகத்தில் பண்டிகைக்கான சந்தோசம் ஆரம்பித்துவிடும். இப்படி தான் நமக்கு கூகுள் அவங்க ஸ்டைல்ல தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…