Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கூகுள் அறிவிக்கும் BARD புதிய Ai டெக்னாலஜி பற்றிய முழு விவரங்கள் | Google Bard Ai

Priyanka Hochumin Updated:
கூகுள் அறிவிக்கும் BARD புதிய Ai டெக்னாலஜி பற்றிய முழு விவரங்கள் | Google Bard Ai Representative Image.

தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சியாக கட்டாயம் திகளப்போவது AI என்னும் Artificial Intelligence தான். இந்த தொழில்நுட்பத்தில் இருக்கும் திறன்களைக் கருதி உலகின் முதல் நிறுவனமாகத் திகழும் கூகுள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதனை அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் தெளிவான விளக்கத்துடன் கூறியுள்ளார். அதைப் பற்றிய விவரங்கள் இதோ.

கூகுள் அறிவிக்கும் BARD புதிய Ai டெக்னாலஜி பற்றிய முழு விவரங்கள் | Google Bard Ai Representative Image

AI பற்றிய சுருக்கம்

மனிதர்களின் வேலைகளை குறைக்கும் வகையில் உருவானது தான் டெக்னாலஜி. ஆனால் AI டெக்னாலஜியானது நம்மால் எண்ணிப் பார்க்க முடியாத பல விஷயங்களை நமக்காக செய்ய இயலும். ஆகவே  கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் வளர்ச்சிக்காக AI தொழில்நுட்பத்தைச் சார்ந்து வேலைகளைத் தொடங்கியது. எதற்காக இந்த முடிவு எனில் - உலகின் தகவல்களை ஒழுங்கமைத்து அதை உலகளாவிய அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல் பட தொடங்கினோம் என்று சுந்தர் தெரிவித்துள்ளார். 

கூகுள் அறிவிக்கும் BARD புதிய Ai டெக்னாலஜி பற்றிய முழு விவரங்கள் | Google Bard Ai Representative Image

உங்களுக்காக BARD

மக்களுக்கு உதவும் வகையில் இருக்கும் இந்த தொழில்நுட்பத்தின் ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றங்களில் பணியாற்றுவது மிகவும் உற்சாகமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் Language Model for Dialogue Applications (or LaMDA) மூலம் இயக்கப்படும் அடுத்த ஜெனெரேஷன் மொழி மற்றும் உரையாடல் திறனை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். LaMDA-வால் இயக்கப்படும் சோதனை உரையாடல் AI சேவையில் தற்போது பணியாற்றி வருகிறோம். அதனை நாங்கள் பார்ட் [Bard] என்று அழைக்கிறோம்.

இந்த தொழில்நுட்பம் உலகளவில் மக்கள் பயன்படுத்துவதற்கு முன்னர் நம்பகமான பயனர்களைக் கொண்டு சோதனை மேற்கொண்டு வருகிறோம். நம்முடைய பெரிய மொழி மாதிரிகளின் சக்தி, நுண்ணறிவு மற்றும் படைப்பாற்றலுடன் உலகின் அறிவின் அகலத்தை இணைக்க பார்ட் முயல்கிறது. மேலும் இணையத்தில் நம்முடைய தேடலுக்கு ஏற்ற உயர்தர தகவலை நமக்கு வழங்குகிறது.

தற்போது LaMDA-வின் லைட் வெயிட் மாடல் வெர்சனை முதலில் வெளியிட கூகுள் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் இந்த மாடலுக்கு குறைவான கம்ப்யூட்டிங் சக்தி தேவைப்படுகிறது. மேலும் அதிக பயனர்களை அளவிடவும் உதவுகிறது. இதன் மூலம் அவர்கள் தங்களின் பயன்பாட்டின் போது பார்டின் பதில்கள் தரம், பாதுகாப்பு மற்றும் நிஜ உலகத் தகவலின் அடிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்ள முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்