Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Hinglish Language: கூகுள் பே -யில் புதிய மொழி அறிமுகம்…!!

Nandhinipriya Ganeshan June 05, 2022 & 14:00 [IST]
Hinglish Language: கூகுள் பே -யில் புதிய மொழி அறிமுகம்…!!Representative Image.

Hinglish Language: கூகுளின் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் செயலியான கூகுள் பே, அதன் பயன்பாட்டில் ஹிங்கிலிஷ் (Hinglish) என்ற புதிய மொழியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், கூகுள் பே இப்போது ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் மற்றும் தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் சேவைகளை வழங்குகிறது. இந்த மொழிச் சேர்க்கையானது Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது. 

ஹிங்கிலிஷ்:

அதென்ன ஹிங்கிலிஷ்-னு தான கேட்கிறீர்கள். நம் தமிழ் மக்கள் தங்கிலிஷ் எப்படி எழுத பயன்படுத்துகிறோமோ, அதேபோல இந்தி தெரிந்தவர்கள் சுலபமாக பேசுவதற்காக பயன்படுத்தும் மொழி. அதாவது, இந்தி மற்றும் ஆங்கில மொழியின் கலவையாகும். இந்த மொழியானது இந்தியாவில் பல இடங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

செட்டிங்ஸ்:

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் தனது டிஜிட்டல் பேமெண்ட் செயலியில் ஹிங்கிலிஷ் மொழியைச் சேர்ப்பது உள்ளிட்ட புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தது. அந்த வகையில், தற்போது அதன் அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

Google Pay -ல் பயனர்கள் ஹிங்கிலிஷ் மொழியை இயக்க, app’s settings க்கு சென்று,  ‘Personal Info’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதற்கு கீழ் மொழிகளின் பட்டியல் காண்பிக்கப்படும். அதில் உங்களுக்குத் தேவையான ஹிங்கிலிஷ் மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீங்க ஒருமுறை ஹிங்கிலிஷ் மொழியை இயக்கியதும், ஆப்பில் உள்ள அனைத்து வசதிகளும் அம்மொழிக்கு மாற்றப்படும். 

உதாரணமாக, 'Add your bank account’ என்பது ‘Apna bank account add karein’ என்றும்,  ‘Pay to your contacts’ என்பது  ‘Contacts ko pay karein’ என்றும் மாற்றப்படும். 

கூகுள் பே:

Paytm, BharatePe, Amazon Pay மற்றும் WhatsApp Pay போன்ற மற்ற ஆன்லைன் பேக்கிங் தளங்களுக்கு மத்தியில் எப்போதும் முன்னணியில் இருக்கும் ஒரு பிரபல மொபைல் பேமெண்ட் தளமாகும். 


இன்ஸ்டாகிராமின் வேற லெவல் அப்டேட்...!! ஏராளமான புதிய அம்சங்கள் அறிமுகம்.. என்னனு தெரிஞ்சிக்கோங்க..!!


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்