Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

ரீசார்ஜ் செய்ய காசு இல்லையா...உடனே Google Pay Appல...விளையாடி ரூ. 200 கேஷ்பேக் வெல்லுங்க!

Priyanka Hochumin October 22, 2022 & 12:45 [IST]
ரீசார்ஜ் செய்ய காசு இல்லையா...உடனே Google Pay Appல...விளையாடி ரூ. 200 கேஷ்பேக் வெல்லுங்க!Representative Image.

இந்த வருடம் Diwali 2022 ஆனது அனைவருக்கும் மிகவும் விசேஷமாகத் தான் இருக்க முடியும். ஏனெனில் அவ்ளோ சந்தோஷமும், சலுகைகலும் மாத்தி மாத்தி தரும் போது கசக்குமா என்ன? அப்படி தான் நம்ப Google Pay App தனது பயனர்களுக்கு ரூ. 200/- வரையிலான கேஷ்பேக் தர உள்ளது. அது உங்களுக்கு வேணும்னா நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒன்னு மட்டும் தான்.

ரீசார்ஜ் செய்ய காசு இல்லையா...உடனே Google Pay Appல...விளையாடி ரூ. 200 கேஷ்பேக் வெல்லுங்க!Representative Image

நீங்கள் அந்த சர்பிரைஸ் தொகை வாங்க சில சுற்றுகளை கடக்க வேண்டும். ஆனா அதுக்கு நீங்கள் ஒரு ஆள் மட்டும் போதாது, உங்களுக்கு வேண்டிய 4 நண்பர்களுடன் சேர்ந்த தான் இதை நீங்க செய்யணும். அதுக்கு அவங்களும் Google Pay App-ஐ பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். சரி இப்ப என்ன செய்யணும்னு பாப்போமா?

ரீசார்ஜ் செய்ய காசு இல்லையா...உடனே Google Pay Appல...விளையாடி ரூ. 200 கேஷ்பேக் வெல்லுங்க!Representative Image

கூகுள் பே பயனர்கள் இந்த போட்டியில் நுழைய இண்டி-ஹோம் சாட் ஹெட்-ஐ (Indi-Home chat head) ஓபன் செய்ய வேண்டும். இது நீங்கள் கூகுள் பே ஆப்-பை திறந்த உடனே Diwali Mela is Live என்கிற பேனருக்கு கீழ் இருக்கும். பிறகு உங்களின் நண்பர்காளுடன் சேர்ந்து ஃப்ளோர்களை கட்டமைக்கவும் (Build floors), அதற்கான ஒவ்வொரு படியிலும் உங்களுக்கு வெகுமதிகள் (Rewards) வெயிட்டிங்ல இருக்கும்.

ரீசார்ஜ் செய்ய காசு இல்லையா...உடனே Google Pay Appல...விளையாடி ரூ. 200 கேஷ்பேக் வெல்லுங்க!Representative Image

நீங்க அந்த மாறி ஃப்ளோர்களை கட்டமைக்க, ஏதேனும் காண்டாக்டுக்கு பணம் அனுப்பவோ அல்லது QR கோட் பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும் போன்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும். அப்படி எல்லா சுற்றுகளை கடக்கும் போது மொத்தம் ரூ. 200/- மதிப்பிலான கேஷ்பேக் உங்களுக்காக காத்திட்டு இருக்கும். மேலும் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி வரை மிகவும் உயரமான ஃப்ளோர்களை கட்டமைத்த முதல் 5 லட்சம் அணிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்