நம்முடைய மொபைலில் போட்டோக்களை பார்ப்பதற்காகவும், அதை எடிட் செய்வதற்காகவும் கேலரி என்ற செயலி இருக்கும். இருப்பினும், நம்மில் பலரும் தற்போது வரை கேலரி செயலிக்கு பதிலாக கூகுள் போட்டோஸ் செயலியை பயன்படுத்தி வருகிறோம். தற்போது இந்த செயலியில் தான் கூகுள் நிறுவனம் 'மேஜிக் எடிட்டர்' என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது பயனர்களுக்கு போட்டோ எடிட்டிங்கில் புதிய அனுபவத்தை தருவதோடு ஈர்க்கக்கூடிய வகையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, மேஜிக் எடிட்டர் என்ற ஆப்ஷன் மூலம் நம்முடைய போட்டோவில் இருக்கும் தேவையில்லாத பகுதிகளை நீக்கவும், அதை எடிட் செய்யவும் AI என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அம்சம் ஃபோட்டோ அன்ப்ளர் மற்றும் மேஜிக் எரேஷர் போன்ற புகைப்பட எடிட்டிங் கருவிகள் மூலம் பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு போட்டோவில் உள்ள ஒரு நபரை இருந்த இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்த முடிவும். மேலும், பின்னணியில் உள்ள தேவையில்லாத பொருட்கள் அல்லது பகுதிகளை நீக்கவும் முடியும்.
குறிப்பாக, போட்டோவின் நிறத்தை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும். மேஜிக் எடிட்டர் அம்சம் அனைத்து வகையான பயனர்களுக்கும் கிடைக்குமா அல்லது குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு மட்டும் கிடைக்குமா என்று தெளிவாக தெரியவில்லை. மேலும், இந்த மேஜிக் எடிட்டர் அம்சம் புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு அற்புதமான வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த சூப்பரான அம்சம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…