Google Pixel 7 Pro Price in India: கூகுள் நிறுவனம் நடைபெற்ற அக்டோபர் ஈவென்ட் 2022 இல் Pixel 7, Pixel 7 Pro, Pixel Watch மற்றும் Pixel tablet ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதே போல் இந்தியாவில் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் எப்போது இந்த போன்களை வாங்க முடியும் என்றால், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் முதன்மை இ-காமெர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மூலம் நம்மால் வாங்க முடியும்.
மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஐபோன் 14 சீரிஸை காட்டிலும் கூகுள் பிக்சல் 7 சீரிஸின் விலை குறைவாகவே உள்ளது. கூகுள் பிக்சல் 7 சீரிஸ் ரூ. 59,999/-க்கு விற்பனையாகிறது. ஆனால் பிக்சல் 7 ப்ரோ சற்று அதிகாமாக ரூ. 84,999/-க்கு கிடைக்கும். மேலும் அறிமுக சலுகையாக பிக்சல் 7 வாங்கினால் ரூ. 6000/-ம் அதே போல் பிக்சல் 7 ப்ரோ வாங்கினால் ரூ. 8500/-ம் கேஷ்பேக் வழங்கப்படும். இது மட்டும் இன்றி நிறைய சலுகைகள் கிடைக்கும்.
பிக்சல் 7 ஸ்மார்ட்போன் ஆனது 6.3 இன்ச் FHD+ டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. மேலும் கூகுளின் சொந்த புதிய டென்சர் ஜி2 செயலி மூலம் இயக்கப்படுகிறது. Pixel 7 மாடல் 8GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டு வருகிறது. கூகுளின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 சாப்ட்வேர் மூலம் இயங்குகிறது. கூடுதலாக, இந்த மாடல்கள் 5 வருட பாதுகாப்பு அப்டேட்களையும் வழங்குகின்றன. பிக்சல் 7 டூயல் ரியர் கேமராக்களுடன் ஒரு பிரைமரி 50 மெகாபிக்சல் கேமரா + அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் வருகிறது. வீடியோ கால் மற்றும் செல்பீ பயன்பாட்டிற்கு முன்புறத்தில் 10.8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
Pixel 7 Pro ஆனது QHD+ தெளிவுத்திறன் மற்றும் 120Hz திரை புதுப்பிப்பு வீதத்தை வழங்கும் பெரிய 6.7-இன்ச் LTPO டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த மாடலும் கூகுளின் சொந்த புதிய டென்சர் ஜி2 செயலி மூலம் இயக்கப்படுகிறது. Pixel 7 மாடல் 12GB RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டு வருகிறது. இதுவும் கூகுளின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 சாப்ட்வேர் மூலம் இயங்குகிறது மற்றும் 5 வருட பாதுகாப்பு அப்டேட்களையும் வழங்குகின்றன. பிக்சல் 7 ப்ரோ 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் பேக் பேனலில் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ப்ரோ மாடல் 30x சூப்பர் ரெசல்யூஷன் ஜூம் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் 48 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸுடன் வருகிறது. பிக்சல் 7 ப்ரோ புதிய 'மேக்ரோ ஃபோகஸ்' அம்சத்தையும் கொண்டுள்ளது. வீடியோ கால் மற்றும் செல்பீ பயன்பாட்டிற்கு முன்புறத்தில் 10.8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களின் பேட்டரி பற்றிய எந்த விவரமும் இன்னும் வெளியாகவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…