Tue ,Jun 06, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

அட்டாகாசமான அம்சங்களுடன் வந்து விட்டது கூகுளின் Pixel Tablet...என்ன ரேட் தான் அதிகம் | Google Pixel Tablet

Priyanka Hochumin Updated:
அட்டாகாசமான அம்சங்களுடன் வந்து விட்டது கூகுளின் Pixel Tablet...என்ன ரேட் தான் அதிகம் | Google Pixel Tablet Representative Image.

2023 ஆம் ஆண்டின் கூகுள் I/O வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் சில புதிய ஹார்டுவேர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றுள் நாம் பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த Pixel Tablet அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பதிவில் அதன் முக்கியமான சிறப்பம்சங்களை பற்றி பாப்போம்.

பிக்சல் டேப்லெட் 10.95-இன்ச் 2560x1600 LCD ஷ்கிரீன், 500 நிட்கள் வழக்கமான பிரகாசம், "ஆன்டி-ஸ்மட்ஜ் கோட்டிங்" மற்றும் USI 2.0 ஸ்டைலஸுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட், கூகுளின் டென்சர் ஜி2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும டைட்டன் எம்2 பாதுகாப்பு கோப்ராசசரை கொண்டுள்ளது. மேலும் 8GB LPDDR5 ரேம் மற்றும் 128 அல்லது 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. டேப்லெட்டின் முன்னும் பின்னும், 8 எம்பி ஃபிக்ஸட் ஃபோகஸ் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பவர் பட்டனில் கைரேகை சென்சார் உட்பொதிக்கப்பட்டுள்ளது. 12 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங்கை தாங்கும் அளவிற்கு 27-வாட்-மணிநேர பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் மூன்று மைக்குகளுடன் அளிக்கப்படுகிறது. அவை பீங்கான், ஹேசல் மற்றும் ரோஸ் ஆகியவற்றில் கிடைக்கும். இதனை ஆர்டர் செய்பவர்களுக்கு பெட்டியில், டேப்லெட், சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் மற்றும் டாக்கிற்கான பவர் பிரிக் ஆகியவற்றை காணலாம். இது போகோ பின்களுடன் கூடிய மேக்னெட்டிக் டாக்கிங் இன்டெர்பேஸ் மற்றும் 15W அதிகபட்ச சார்ஜிங் வீதத்தைக் கொண்டுள்ளது. அதனுள் ஒரு 43.5 மிமீ முழு அளவிலான ஸ்பீக்கர் உள்ளது.

அமெரிக்கா, கனடா, யுகே, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் கூகுள் ஸ்டோரிலிருந்து இது ஏற்கனவே ப்ரீ-ஆர்டர் தயாராக உள்ளது. அது மட்டும் இன்றி ஜூன் 20 அன்று முதல் உலகம் முழுவதும் விற்பனைக்கு வருகிறது. தற்போதைய நிலவரப்படி Pixel டேப்லெட் ஆனது அமெரிக்காவில் $499, UK இல் £599 மற்றும் ஜெர்மனியில் €679-க்கும் விற்பனையாகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்