Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 70,028.54
202.94sensex(0.29%)
நிஃப்டி21,019.00
49.60sensex(0.24%)
USD
81.57
Exclusive

How to Change Name in Aadhaar After Marriage in Tamil: திருமணத்திற்கு பிறகு வீட்டிலிருந்தே உங்க ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரியை மாற்ற முடியும்.. இந்த ஸ்டெப்ப ஃபாலோ பண்ணுங்க..

Nandhinipriya Ganeshan July 03, 2022 & 12:45 [IST]
How to Change Name in Aadhaar After Marriage in Tamil: திருமணத்திற்கு பிறகு வீட்டிலிருந்தே உங்க ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரியை மாற்ற முடியும்.. இந்த ஸ்டெப்ப ஃபாலோ பண்ணுங்க..Representative Image.

How to Change Name in Aadhaar After Marriage in Tamil: இந்தியாவில், ஆதார் அட்டை, நாட்டில் உள்ள அனைவருக்கும் அணுகக்கூடிய மிக முக்கியமான மற்றும் பொருத்தமான அடையாளச் சான்றுகளில் ஒன்றாக மாறியுள்ளது. அரசு திட்டங்கள் முதல் நிதி சேவைகள் வரை அனைத்து இடங்களிலும் அடையாள சான்றாக ஆதார் தேவைப்படுகிறது. இப்போது மனிதர்கள் நேரில் நின்றாலும் கூட ஆதார் அட்டையை தான் அடையாள அட்டையாக கேட்பார்கள். அந்த அளவிற்கு முக்கியம் வந்த ஒரு ஆவணமாக கருதப்படுகிறது. 

இதையும் படிங்க: PAN Card திருத்தம்: மொபைலிலேயே திருத்தம் செய்யும் ஈஸியான வழிமுறைகள்!!

இதில் நபரின் பிறந்த தேதி, பெயர், பாலினம், முகவரி போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதேப்போல், அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் சரியானவையாக இருக்க வேண்டியது கட்டாயம். அந்த வகையில், திருமணம் செய்யவிருக்கும் அல்லது திருமணமான பெண்கள் தங்கள் ஆதார் அட்டையில் பெயர் மாற்றத்தின் நடைமுறையைப் தெரிந்து கொள்ள வேண்டும். 

இதனால் திருமணத்திற்கு பிறகு எந்த சிக்கல்களும் ஏற்படாது. திருமணத்திற்குப் பின் உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் பெயரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் (aadhar card surname change after marriage) முறை மூலம் எளிதாக மாற்றலாம். இந்த பதிவின் மூலம் திருமணத்திற்கு பிறகு உங்களுடைய பெயரை ஆதார் கார்டில் எவ்வாறு புதுப்பிப்பது அல்லது மாற்றுவது என்று தெளிவாகவும், விரிவாகவும் தெரிந்துக் கொள்ளலாம். 

இதையும் படிங்க: இனி எளிய முறையில் ரேஷன் கார்டு அப்டேட் செய்யலாம்!!!

நீங்கள் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மணப்பெண்ணாகவோ அல்லது உங்கள் ஆதார் பெயரை மாற்ற விரும்பும் புது மணப்பெண்ணாகவோ இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கு வழிகாட்டுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். பெயர் மாற்றம் செய்வதில் எந்தவித பிழையும் நடக்காமல் இருக்க பதிவை கவனமாக (how to change surname after marriage in aadhar) படிக்கவும். 

ஆன்லைன் மூலம் மாற்றுவது எப்படி?

❖ முதலில் online self-service update portal என்ற வலைத்தளப்பக்கத்திற்கு சென்று உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தில் லாக் இன் (Login) செய்ய வேண்டும்.

❖ இப்போது உங்க பெயர் அல்லது துணைப் பெயர் அல்லது இரண்டையும் மாற்ற Request கொடுக்கலாம்.

❖ இப்போது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெயர் மாற்றத்தின் சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். (ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்)

❖ பின்னர் பதிவு செய்யப்பட்ட மொமைல் எண்ணிற்கு OTP வரும், அதை கொடுக்கப்பட்டுள்ள ஸ்லாட்டில் போட வேண்டும். இதன் மூலம் நீங்க விரும்பிய மாற்றத்தை செய்து கொள்ளலாம். 

❖ உங்களுடைய அனைத்து ஆவணங்களும் சரிபார்த்த பிறகு மீண்டும் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு செய்தி அனுப்பப்படும். 

❖ இதற்கு நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

இதையும் படிங்க: Pan Card Apply Online in Tamil - இனி பான் கார்டு நகல் ஈஸியா கிடைக்கும் போலையே!

ஆஃப்லைன் மூலம் மாற்றுவது எப்படி?

❖ ஆஃப்லைன் முறைக்கு, அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும்.

❖ நீங்கள் மாற்ற விரும்பும் பெயர்களுக்கு ஆதாரமாய் விளங்கும் ஒரிஜினல் ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். 

❖ அந்த ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு உங்களிடமே திருப்பி கொடுக்கப்படும்.

❖ தேவைப்பட்டால், உங்கள் biometrics அப்டேட் செய்து கொள்ளலாம். இதற்கு ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும். 

இதையும் படிங்க: ஆதாருடன் இன்னமும் இணைக்கவில்லையா? அய்யய்யோ! உடனே பண்ணுங்க.. இல்லைனா.....

ஆதார் அட்டையில் பெயரைப் புதுப்பிக்க தேவையான ஆவணங்கள்:

ஆதார் பெயர் மாற்றத்திற்கான சிறந்த ஆவணம் திருமணப் பதிவாளர் வழங்கிய திருமணச் சான்றிதழாகும். எனவே, விண்ணப்பதாரர் அசல் திருமண சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த திருமணச் சான்றிதழுடன் கீழ்க்கண்ட ஏதேனும் சில ஆவணங்கள் (documents required to change surname in aadhar card) கேட்கப்படலாம். 

  • பான் கார்டு
  • வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)
  • பாஸ்போர்ட்
  • டிரைவிங் லைசன்ஸ்
  • ரேஷன் கார்டு
  • புகைப்படத்துடன் கூடிய வங்கி ATM கார்டு
  • புகைப்படத்துடன் கூடிய கிரெடிட் கார்டு
  • இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை
  • புகைப்படத்துடன் கூடிய கிசான் பாஸ்புக்

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tags:

How to Change Name in Aadhaar After Marriage in Tamil | how to change last name in aadhar card after marriage | how to change name in aadhar card after marriage without marriage certificate | aadhar card surname change after marriage | documents required to change surname in aadhar card | how to change surname after marriage in aadhar


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்