Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

இன்னும் உங்க போனில் 5ஜி ஆக்டிவேட் செய்யலையா? இதோ ஈஸியான வழிமுறை!

Priyanka Hochumin October 05, 2022 & 11:55 [IST]
இன்னும் உங்க போனில் 5ஜி ஆக்டிவேட் செய்யலையா? இதோ ஈஸியான வழிமுறை!Representative Image.

நீண்ட ஆண்டு சிரமத்திற்கு பிறகு ஒருவழியாக இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகியுள்ளது. இந்த மாதம் அக்டோபர் 1 ஆம் தேதி நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி அவர்களை இந்த சேவையை அறிமுகம் செய்தார். அதில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவற்றின் 5ஜி சேவை குறித்த அனைத்து தகவலும் உறுதிப்படுத்தப்பட்டன.

இன்னும் உங்க போனில் 5ஜி ஆக்டிவேட் செய்யலையா? இதோ ஈஸியான வழிமுறை!Representative Image

யார் யார் எப்ப இருந்து....

ஏர்டெல் நிறுவனம் அக்டோபர் 1 ஆம் தேதி முதலே 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் தசரா விழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது True 5G சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில், இன்று முதல் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய 4 நகரங்களில் தொடங்கப்படவுள்ளது. மற்ற நகரங்களுக்கும் 5ஜி சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 5ஜி சேவைகளை பெற புதிய சிம் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. விஐ நிறுவனமோ எப்போது முதல் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக எந்த தகவலும் இன்னும் வெளியிடவில்லை.

இன்னும் உங்க போனில் 5ஜி ஆக்டிவேட் செய்யலையா? இதோ ஈஸியான வழிமுறை!Representative Image

உங்க போனில் 5ஜி சேவை இருக்கா?

சரி, 5ஜி சேவை கிடைக்க புது போன் வாங்கணுமா இல்ல புது சிம் வாங்கணுமா போன்ற நிறைய கேள்விகள் நமக்கு தோன்றும். ஆனால் அது எதுவுமே தேவையில்லை. ஏன் தெரியுமா, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகப்படியான போன்கள் 5ஜி சேவைக் கொண்டு தான் வருகிறது. இருப்பினும் அதில் நாம் செக் செய்யவேண்டியது, 5ஜி சேவை இருக்கிறதா என்று தான். அதற்கு,

உங்கள் போனில் செட்டிங்ஸ் ஓபன் செய்யுங்கள்.

பின்னர் connection என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

அதனுள் மொபைல் நெட்வொர்க் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு நெட்வொர்க் மோட் என்பதை கிளிக் செய்யவும்.

இதில் 2G/3G/4G/5G (ஆட்டோ கனெக்ட்) என்ற விருப்பம் இருந்தால், உங்களின் போனில் 5ஜி சேவை உள்ளது. அப்படி  2G/3G/4G மட்டும் இருந்தால் உங்கள் போனில் 5ஜி சேவை இல்லை என்று அர்த்தம்.

இன்னும் உங்க போனில் 5ஜி ஆக்டிவேட் செய்யலையா? இதோ ஈஸியான வழிமுறை!Representative Image

5ஜி ஆக்டிவேட் எப்படி செய்வது?

அப்படி உங்களுடைய போனில் 5ஜி சேவையை இயக்க விரும்பினால் முன்பு குறிப்பிட்ட வகையில் நெட்வொர்க் மோட் என்ற விருப்பத்திற்கு சென்று 2G/3G/4G/5G (ஆட்டோ கனெக்ட்) என்னும் விற்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

பின்னர் நீங்கள் இருக்கும் இடத்தில் எந்த சேவை இருக்கிறதோ அது தானாகவே கனெக்ட் ஆகிவிடும்.

என்ன தான் இது இருந்தாலும், நீங்கள் 5ஜி சேவையை பெற இரண்டு முக்கியமான ஆதரவுகள் இருக்க வேண்டும்.

1. ஒன்று நீங்கள் இருக்கும் இடத்தில் 5ஜி சேவை இருக்க வேண்டும்.

2. உங்களுடைய போன் அல்லது சிம் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்