டிஜிட்டல் உலகில் அனைத்துமே எலக்ட்ரானிக்காக தான் உள்ளது. அதுவும் ஸ்மார்ட்போனை போல ஸ்மார்ட்போன் வாட்ச் தற்போது அதிகமான வாடிக்கையாளர்களை கவர்கிறது. பல முன்னணி நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட் தயாரிப்பில் இருந்தாலும் சில புதிய வாட்ச் மாடல் பார்த்த உடனே வாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் ஒருமுறை பார்த்தால் வாங்க வைக்கும் அப்படியொரு ஸ்மார்ட் வாட்சை பற்றி தான் பார்க்க போகிறோம்.
வாட்ச் மற்றும் இயர்போனாக செயல்படும் Huawei Watch Buds ஒரு நல்ல படைப்பு ஆகும். 1.43 இன்ச் AMOLED டிஸ்பிளெ கொண்ட இந்த Huawei Watch Buds முழுமையாக சார்ஜ் ஏறினால் 3 நாட்கள் தாங்கும் பேட்டரி கொண்டுள்ளது.
கிளாசிக் லெதர் பெல்ட் கொண்ட டிசைனில் அமைந்தாலும் லேட்டஸ் தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள SPO2 tracking, ஸ்லீப் மற்றும் ஸ்ரெஸ் மேனஜ்மெண்ட், ஹார்ட் ரேட், ECG ரீடிங் போன்ற ஆப்சன்கள் தற்போது எல்லோரும் எதிர்பார்க்கும் ஆப்சன் ஆகும். அத்துடன் Ear Buds ப்ளுடூத் 5.2 யில் வேலை செய்யும் வசதி கொண்டது.
GPS, NFC வசதி மற்றும் வாட்டர் ரெஸிசெண்ட் திறன் எல்லாம் இருக்கும் இந்த Huawei Watch Buds விலை 34,999 ரூபாய் ஆகும். விலை கொஞ்சம் அதிகமாக இருப்பது போல தோன்றினாலும் ஆண்ட்ராய்டு iOS யில் இயங்குவதால் இந்த விலை ஏற்புடையதாக தான் உள்ளது. 392 ppi 466x 466 px கொண்ட Huawei Watch Buds வாட்சில் கேமரா, வாஸ் காலிங் போன்ற ஆப்சன் இல்லாமல் இருப்பது மீண்டும் விலையை அதிகமோ என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இயர் பட்ஸ் இரண்டும் ஒரே கேஜ்ட்டில் கிடைக்கும் டெக்னாலஜி வரவேற்கத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…