Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

Hyabusa2 mission: ஆராய்ச்சியார்களின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி! ஒரு வழியாக அதை கண்டுபிடித்துவிட்டார்கள்!

Priyanka Hochumin June 10, 2022 & 20:00 [IST]
Hyabusa2 mission: ஆராய்ச்சியார்களின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி! ஒரு வழியாக அதை கண்டுபிடித்துவிட்டார்கள்!Representative Image.

Hyabusa2 mission: பிரபஞ்சத்தில் முதல் முறையாக பூமியை தாண்டி விண்வெளியில் பறக்கும் ஒரு சிறுகோளில் உயிர் வாழ தேவையான அமினோ ஆசிட்ஸ்-ஐ கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் பலவருடங்களாக நடத்திய ஆராய்ச்சிக்கு கிடைத்த பலனாக, ஹயபுசா2 மிஷன் மூலம் ருய்கு என்ற சிறுகோளில் இருந்து திரும்பிய சாம்பிள்களில் இருந்து 20 அமினோ அமிலங்களை அவர்கள் கண்டறிந்தனர்.

ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்த சாம்பிள்களில், கார்பன் மற்றும் ஆர்கானிக் பொருட்களின் தடயங்கள் இருப்பதாக அறிவியல் கூற்றுகளை உறுதிப்படுத்துகிறது. இந்த கண்டுபிடிப்பை ஜப்பானிய விண்வெளி நிறுவனமான ஜாக்ஸா தான் கண்டுபிடித்துள்ளது. இவர்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள முக்கிய காரணம், சோலார் சிஸ்டத்தில் மெட்டீரியல்ஸ் எப்படி விநியோகிக்கப்படுகின்றன மற்றும் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு அது எந்த வகையில் தொடர்புடையதாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தடயங்களை கண்டுபிடிப்பதில் மிகுந்த நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டனர்.

எதனால் அமினோ அமிலங்கள் முக்கியம்?

அமினோ அமிலங்கள் என்பது மூலக்கூறுகள் (molecules) ஆகும், அவை புரதங்களை உருவாக்குகின்றன மற்றும் உயிரைக் கட்டமைக்கின்றன. அதில் இருக்கும் மூலக்கூறுகள் மனித உயிர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் அவை உணவு, வளர்ச்சி, உடல் திசுக்களை சரிசெய்தல் மற்றும் பல உடல் செயல்பாடுகளைச் செய்ய உதவுகின்றன. கூடுதலாக, இவை உடலுக்கு ஆற்றலின் ஆதாரமாகவும் பயன்படுத்தப்படலாம்.

இதக்ரு முன்னதாக பூமியில் விழுந்த சிறுகோள்களில், இந்த அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அந்த சிறுகோள்கள் அதிக வேகத்தில் பூமியை நோக்கி வரும் பொழுது எரிந்து பிளாஸ்மாவை உருவாக்கும். இதனால் அதில் அமினோ அமிலங்கள் அரிதாகவே அளவிடப்பட்டன. இவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 20 முக்கிய மூலப்பொருள்கள், சூரிய குடும்பத்தின் உருவாக்கத்திலிருந்து இந்த எச்சங்களில் கரிமப் பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

ருய்கு என்றால் என்ன?

ருய்கு என்பது ஒரு CI காண்ட்ரைட் சிறுகோள் ஆகும். இது ஒரு வகையான ஸ்டோனி கார்பன் நிறைந்த சிறுகோள், மேலும் ஒரு இரசாயன கலவையுடன் சூரியனைப் போன்றது. இதனால் நமக்குத் தெரியப்படும் அற்புதமான விஷயம் என்னவென்றால், ஒரு சிறுகோள் நீர் மற்றும் கரிமப் பொருட்களால் நிறைந்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட பூமிக்கு வழங்கப்பட்ட வாழ்க்கையின் விதைகளின் சாத்தியமான ஆதாரமாக இருக்கின்றன என்று ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் ஹிசாயோஷி யூரிமோடோ கூறியுள்ளார்.

Asteroid, Hyabusa2 mission, Jaxa, Japan, Science News, Origin of life, amino acid, what is amino acid, Asteroid mission

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்