பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆட்டோமேட்டிக் இட்லி தயாரிக்கும் மச்சினி தற்போது அனைத்து சோசியல் மீடியாவிலும் ட்ரெண்டாகி வருகிறது.
எப்படி மனிதர்களாகிய நாம் வேலை செய்யும் முறை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறதோ, அப்படியே தான் வீட்டில் நம் அம்மா, அப்பா, பாட்டி சமைக்கும் முறையும் குறியானது வருவதற்கான ஆதாரம் தான் இது. இனிமே யாரும் ரோட்டு கடைல போய் பாட்டி சூட்ட இட்லிய வாங்க மாட்டாங்க போலையே. ஷரன் ஹிரேமத் மற்றும் சுரேஷ் சந்திரசேகரன் என்னும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் நிறுவப்பட்ட Freshot Robotics நிறுவனம் செய்த காரியம்.
இந்தியாவில் அதுவும் குறிப்பாக தென்னிந்தியாவில் முக்கிய உணவாக இருப்பது இட்லி. நமக்கு இந்த பிரட், பட்டர், ஜாம்லா சரி பட்டு வராது. நல்லா இட்லி வச்சி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி அப்புறம் சாம்பார்னு வச்சு சாப்பிடறது தான் செட் ஆகும். ஏன்னா, நாம அப்டி தான் வளர்ந்து இருக்கோம். அதுல பாருங்க, நம்ப வீட்ல அரிசி, உளுந்து எல்லாம் ஊற வச்சி, ஆட்டு கல்லுல மாவு ஆட்டி, ஒரு நாள் வெளிய வச்சு நல்லா பொங்கி வந்ததுக்கு அப்புறம் இட்லி பாத்திரத்துல போட்டு நல்லா சுட சுட எடுத்து இட்லி சாப்பிட்டோம்.
ஆனா இப்ப ஜஸ்ட் 55 வினாடில இட்லி தர மெஷின்ன உருவாக்கி இருக்காங்க. அது யாருன்னா பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஷரன் ஹிரேமத் மற்றும் சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோரால் ஃப்ரெஷப் ரோபோட்டிக்ஸ் என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். இது 24x7 வேலை செய்யும் என்பதால் இட்லி எப்ப வேணாலும் கிடைக்கும்.
எப்படி வேலை செய்யுது தெறியுமா? அந்த ஏடிஎம் மெஷினில் மெனுவை பெற க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். பின் இதில் காட்டப்படும் உணவுகளை ஆர்டர் செய்து அப்படியே பணம் செலுத்தலாம். அடுத்து உடனே 55 வினாடிகளில் இட்லி அழகா பேக் செய்து, கூட பொடி மற்றும் சட்னி வழங்கப்படுகிறது. இது இப்போதைக்கு பெங்களூரில் இரண்டு இடத்தில மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. வரும் காலத்தில் முக்கிய இடங்களில் வைக்கப் படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்து தோசை, ரைஸ், ஜூஸ் ஆகியவை கொண்டு வரப்படும் என்றும் தெரிகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…