Lenovo Tab P12 Pro Price in India: லெனோவா நிறுவனம் தங்களின் புத்தம் புதிய இரண்டு ஸ்மார்ட் கேஜெட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று, 12.6-இன்ச் டச் ஷ்கிரீன் மற்றும் Qualcomm Snapdragon 870 SoC ஆல் இயக்கப்படும் Tab P12 Pro டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு, AMD Ryzen 7 5800G SoC மற்றும் AMD Radeon RX 6600M 8GB கிராபிக்ஸ் மூலம் இயங்கும் யோகா ஆல்-இன்-ஒன் (AIO) 7 டெஸ்க்டாப்பை Lenovo அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் இந்த ஸ்மார்ட் கேஜெட்களை வாங்க வேண்டும் என்றால், உங்களால் ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும். இதனின் முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
Lenovo Tab P12 Pro அம்சங்கள் | Lenovo Tab P12 Pro specifications
நமக்கு டேப்லெட் என்றாலே ஷ்கிரீன் குவாலிட்டி தான் மிக முக்கியம். அந்த வகையில், Lenovo Tab P12 Pro 12.6-இன்ச் AMOLED டச் ஷ்கிரீனை 16:10 aspect ratio மற்றும் 2560x1600 பிக்சல்கள் ரிசொல்யூஷன் கொண்டுள்ளது. இதில் உள்ள டச் ஷ்கிரீன் S-ஸ்ட்ரைப் RGB சப்-பிக்சல் அமைப்பைப் பெறுகிறது. இதில் தெளிவான சவுண்ட் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்க டால்பி விஷனை ஆதரிக்கிறது. மேலும் 400 நிட்கள் வரை பிரைட்னெஸ் உடன் 107 சதவீத NTSC இன் வண்ண வரம்பைப் பெறுகிறது. நாம் நீண்ட நேரம் Lenovo Tab P12 Pro டேப்லெட்டை பயன்படுத்தும் பொழுது கண் பாதுகாப்பிற்காக, TUV Rheinland இலிருந்து லோ-ப்ளூ லைட் எமிஸ்சன் சான்றிதழுடன் வருகிறது. இது SLS சரவுண்ட் சவுண்ட் JBL ஸ்பீக்கர்கள், குவாட் ஆடியோ சேனல்கள் மற்றும் பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சவுண்ட் குவாலிட்டியை வழங்குவதற்காக Lenovo Premium ஆடியோ ட்யூனிங்குடன் ஒருங்கிணைக்கப்பட்ட Dolby Atmos ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. Lenovo Tab P12 Pro டேப்லெட் ஆண்ட்ராய்டு 11 மற்றும் அதற்குப் பிந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வெர்ஸன்களை ஆதரிக்கிறது.
இந்த டேப்லெட் அயலாது உழைக்க, Adreno 650 GPU உடன் Qualcomm Snapdragon 870 SoC மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஸ்டோரேஜ் அம்சத்தை பொறுத்த வரை, 8GB RAM + 256GB UFS 3.1 ஆன்-போர்டு மெமரியைப் பெறுகிறது. கூடுதலாக, 1TB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் ஆப்ஷனையும் பெறுகிறது. இது 10,200mAh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, எனவே சார்ஜிங் செய்வதன் மூலம் ஆன்லைன் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதற்கு 14.6 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இது 5.63mm மெல்லியதாகவும் 565g எடையுடனும் உள்ளது. மேலும் டிஸ்பிளே மெல்லியதாக இருப்பதால், அதனை பாதுகாக்க மெல்லிய பெசல்களால் சூழப்பட்டுள்ளது மற்றும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்படுகிறது. போட்டோ மற்றும் வீடியோக்களை பொறுத்த வரை, 13MP வைடு ரியர் கேமரா மற்றும் 5MP அல்ட்ரா வைட் ரியர் கேமராவும், முப்புரத்தில் 8MP செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது.
இதில் இருக்கும் மற்ற பயனுள்ள அம்சங்கள் என்னவென்றால், பயனர்கள் டேப்லெட்டிலிருந்து கூடுதல் செயல்பாட்டைப் பெற, நான்கு-புள்ளி போகோ பின் உதவியுடன் ஆப்ஷனல் கீபோர்டை ஈஸியாக இணைத்துக்கொள்ளலாம். மேலும் அதன் ஃபோலியோ ஸ்டாண்டின் உதவியுடன் அதன் ஃபோலியோ ஸ்டாண்டின் உதவியுடன் horizontal ஆக நிற்கச் செய்யலாம். இந்தியாவில் இந்த டேப்லெட் Lenovo Precision Pen 3 ஸ்டைலஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பென் Lenovo Tab P12 Pro உடன் தானாக இணைகிறது, வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்கிறது மற்றும் லோ லேடன்சி ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் அல்டிமேட் என்னது தெரியுமா, Lenovo Tab P12 Pro ஆக்சிடெண்டல் டேமேஜ் ப்ரொடெக்ஷன் ஒன் மற்றும் டேப்லெட்டுடன் பயனர்கள் தொகுப்பில் சேர்க்கலாம்.
Lenovo Tab P12 Pro விலை | Lenovo Tab P12 Pro Price in India
இந்தியாவில் Lenovo Tab P12 Pro-வின் விலை ரூ. 69,999/- மட்டுமே. Lenovo.com, Amazon மற்றும் Lenovo பிரத்தியேக ஸ்டோர்களில் Tab P12 Pro Storm Gray நிறத்தில் ஆல்-மெட்டல் பில்டுடன் வாங்க முடியும். இன்னும் மற்ற ஆஃப்லைன் ரீடெய்ல் சேனல்கள் மூலம் வாங்க முடியாது, அந்த வசதியும் கூடிய விரைவில் கிடைக்கும்.
Lenovo Tab P12 Pro Price in India, lenovo tab p12 pro specifications, lenovo tab p12 pro release date in india, lenovo tab p12 pro review, lenovo tab p12 pro buy online, lenovo tab p12 pro amazon,
உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…