Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

இனி நாங்களும் பணம் வாங்குவோம் - ட்விட்டரைத் தொடர்ந்து மெட்டா அதிரடி!

Abhinesh A.R Updated:
இனி நாங்களும் பணம் வாங்குவோம் - ட்விட்டரைத் தொடர்ந்து மெட்டா அதிரடி!Representative Image.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவதற்கு பணம் செலுத்தும் வகையில் Meta Verified என்ற புதிய சந்தா திட்டத்தை Meta நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்தியாவில், மக்கள் ஒவ்வொரு மாதமும் பணத்தைச் செலுத்தி, அவர்களின் சுயவிவரங்களில் ஒரு சிறப்பு நீல நிறச் சரிபார்ப்பு அடையாளத்தை சந்தா முறையில் பெறலாம் என மெட்டா கூறியுள்ளது. iOS மற்றும் Android பயனர்களுக்கு ரூ.699 என்ற சந்தா விலையில், மேம்படுத்தப்பட்ட கணக்குப் பாதுகாப்பு போன்ற கூடுதல் நன்மைகளை Meta Verified வழங்குகிறது.

MetaVerified இப்போது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பயனர்கள் கணக்கின் உண்மைத்தன்மையை சரிபார்க்கிறது. இதனைப் பெற அடையாள அட்டை மட்டும் போதுமானது. அதை சமர்பித்து பயனர்கள் ப்ளூ டிக் குறியீட்டைப் பெறலாம்.

இனி நாங்களும் பணம் வாங்குவோம் - ட்விட்டரைத் தொடர்ந்து மெட்டா அதிரடி!Representative Image

பிரபலமாகும் ப்ளூ டிக்

நிறைய பேர் தங்கள் கணக்கில் நீல நிற சரிபார்ப்பு அடையாளமான ப்ளூ டிக் குறியீட்டை விரும்புகிறார்கள். ஏனெனில் அது அவர்களை முக்கியமான மற்றும் நம்பகமான நபராக தோன்றச் செய்கிறது. இந்த சிறப்புச் சேவைக்கு நீங்கள் பணம் செலுத்தும்போது, ​​ஆன்லைனில் உங்களைப் போல் வேறு நபர்கள் கணக்குத் தொடங்கி மோசடி செய்வதைத் தடுக்க இது உதவுகிறது. மேலும், போலிக் கணக்குகளை மிக எளிதாக கண்டுபிடித்து நிறுத்த முடியும் என்று மெட்டா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில், சிலர் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் தாங்கள் முக்கியமானவர்கள் என்பதைக் காட்ட ப்ளூ டிக் குறியீட்டை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னதாகவே பல காரணங்களுக்காக அது கொடுக்கப்பட்டதால், அந்த நபர்கள் மட்டும் அதற்காக பணம் செலுத்த வேண்டியதில்லை. இது ட்விட்டர் செய்த காரியத்தை விட பெருசா ஒண்ணுமில்ல என முணு முணுக்கின்றனர் இணைய வாசிகள்.

இனி நாங்களும் பணம் வாங்குவோம் - ட்விட்டரைத் தொடர்ந்து மெட்டா அதிரடி!Representative Image

ட்விட்டர் செய்த காரியம்

இதற்கு காரணம், சமீபத்தில் ட்விட்டர் தங்கள் ப்ளூ டிக் குறியீட்டை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு புதிய கட்டண முறையை உருவாக்கியது. அதாவது ப்ளூ டிக் வைத்திருக்கும் அனைத்து பயனர்களும் மாத சந்தா செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. அப்படி செலுத்தாதவர்கள் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக் பறிக்கப்பட்டது பலருக்கு அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது.

ட்விட்டர் ப்ளூ என்ற சிறப்பு சேவையைப் பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் ரூ.900 செலுத்த வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் மெட்டா நிறுவனம் இதே போன்ற சேவையை ரூ.300 குறைவாக வழங்குகிறது. இது இந்தியாவில் உள்ள சமூக வலைத்தள பயனர்களுக்கு  ஒரு நல்ல செய்தி ஆகும். இதனால் பலர் மெட்டாவின் சேவையைப் பயன்படுத்த விரும்பலாம்.

இனி நாங்களும் பணம் வாங்குவோம் - ட்விட்டரைத் தொடர்ந்து மெட்டா அதிரடி!Representative Image

எப்போது எதிர்பார்க்கலாம்.

தற்போது, ​​ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டுமே Meta Verified ஆதரவைப் பயன்படுத்த முடியும். ஆனால் விரைவில், இந்தி மொழிக்கு ஆதரவு வழங்க நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. தொடர்ந்து பிற இந்திய மொழிகளுக்கும் இச்சேவை அறிமுகம் செய்யப்படும்.

மெட்டா வெரிஃபைடு சேவையைப் பெற, பயனர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டை போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.

Meta Verified என்பது ஒரு புதிய சந்தா சேவையாகும். இது குறிப்பிடத்தக்க வரைமுறைகளுக்குப் பதிலாக அரசாங்க அடையாள அட்டையின் அடிப்படையில் கணக்கு அங்கீகாரத்தை வழங்குவதது தான் இதன் நோக்கம். இந்தியாவில் உள்ள பயனர்கள் தங்கள் சுயவிவரங்களில் சரிபார்க்கப்பட்ட ப்ளூ டிக் குறியீட்டைப் பெற அனுமதிக்கிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்