Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சுமார் 40 லட்சம் ஆண்டுகள் பழமையான நெபுலா...NASA வெளியிட்ட அதிர வைக்கும் புகைப்படம்!

Priyanka Hochumin October 12, 2022 & 16:30 [IST]
சுமார் 40 லட்சம் ஆண்டுகள் பழமையான நெபுலா...NASA வெளியிட்ட அதிர வைக்கும் புகைப்படம்!Representative Image.

பூமியில் இருந்து சுமார் 7100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் கண் கவரும் அழகைக்கொண்ட குமிழ் மூடிய நெபுலா புகைப்படத்தை NASA நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சுமார் 40 லட்சம் ஆண்டுகள் பழமையான நெபுலா...NASA வெளியிட்ட அதிர வைக்கும் புகைப்படம்!Representative Image

நம் கண்ணே பற்றும் போல...

இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது, இன்னும் நமக்குத் தெரியாத என்னெல்லாம் மர்மங்கள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உலக நாடுகள் பல செயற்கைக்கோள்களையும், தொலைநோக்கிகளையும் விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதில் முதன்மை நிறுவனமாக அமெரிக்காவில் இருக்கும் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா நிறைய புது தகவல்களை வெளியிட்டு வருகிறது. இதனால் உலக மக்களுக்கு விண்வெளியில் இருக்கும் பல அற்புதமான விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சுமார் 40 லட்சம் ஆண்டுகள் பழமையான நெபுலா...NASA வெளியிட்ட அதிர வைக்கும் புகைப்படம்!Representative Image

ஹப்பிள் தொலைநோக்கி!

நாசா நிறுவனம் ஏப்ரல் 24, 1990 இல் ஹப்பிள் தொலைநோக்கியை விண்வெளியில் நிலைநிறுத்தியது. அதன் வழியாக நிறைய புகைப்படங்களை ஆராய்ச்சிகளுக்காகபயனப்டுத்தி வருகிறது. அது தற்போது பூமியில் இருந்து 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பபுள் நெபுலாவை நாசாவிற்கு படம் எடுத்து அனுப்பி உள்ளது. இந்த பபுள் நெபுலா 7 ஆண்டுகள் சுற்றளவிற்கு மிக பிரம்மாண்டமாக உள்ளது.

சுமார் 40 லட்சம் ஆண்டுகள் பழமையான நெபுலா...NASA வெளியிட்ட அதிர வைக்கும் புகைப்படம்!Representative Image

நெபுலா என்றால் என்ன?

விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள், தூசி மற்றும் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களால் உருவாகும் பெரிய மேகத்தை குறிப்பது தான் நெபுலா. அந்த வகையில் பபுள் நெபுலா தற்போது வாயுக்களால் ஆன மிகப்பெரிய குமிழால் அல்லது மேகத்தால் மூடப்பட்டுள்ளது. இது மற்ற நெபுலாக்களைக் காட்டிலும் மிகவும் பிரபலமானது ஏனெனில், இது சுமார் 4 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. அது இன்னும் 1 முதல் 2 கோடி ஆண்டுகள் ஆனது ‘சூப்பர்நோவா’வாக மாறிவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது. விண்மீன்கள் வெடித்து சிதறும் நிகழ்வைத் தான் சூப்பர்நோவா என்று குறிப்பிடுகின்றனர்.

சுமார் 40 லட்சம் ஆண்டுகள் பழமையான நெபுலா...NASA வெளியிட்ட அதிர வைக்கும் புகைப்படம்!Representative Image

போட்டோவில் என்ன தெரிகிறது....

தொலைநோக்கி அனுப்பிய புகைப்படத்தில் இருக்கும் விளக்கத்தை நாசா தெரிவித்துள்ளனர். குளிர் ஹைட்ரஜன் வாயு மற்றும் விண்வெளி தூசியின் அடர்த்தியான நெடுவரிசைகளை புகைப்படத்தின் மேல் இடது மற்றும் மையத்தில் காணலாம். இந்த நெபுலாவை புலப்படும் ஒளியில் சித்தரிக்கிறது மற்றும் அதன் அற்புதமான வண்ணங்களைக் காட்டுகிறது - ஹைட்ரஜன் பச்சை, ஆக்ஸிஜன் நீலம் மற்றும் நைட்ரஜன் சிவப்பு.

படத்தை தெளிவாக விவரிக்க வேண்டும் என்றால், " படத்தின் மேல் இடதுபுறத்தில், மஞ்சள் மற்றும் தங்க மேகங்கள் விண்வெளியின் கருமையை சந்திக்கும் போது பச்சை நிறமாக மாறுகின்றன. மையத்தில், ஒரு நீல மற்றும் பச்சை குமிழி மஞ்சள் நிற மேகங்களுடன் பிரகாசமான இளஞ்சிவப்பு நட்சத்திரத்துடன் வெளிப்படுகிறது. அதன் அருகில்" என்று நாசா தெரிவிக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்