Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இது என்ன Keyboard இப்படி இருக்கு? காம்பெக்ட் சைஸ்ல பாக்ஸ் மாறி இருக்கே!

Priyanka Hochumin August 24, 2022 & 14:10 [IST]
இது என்ன Keyboard இப்படி இருக்கு? காம்பெக்ட் சைஸ்ல பாக்ஸ் மாறி இருக்கே!Representative Image.

நாம் இதுவரை பார்த்த கீபோர்டுகளில் அல்பாபெட் எழுத்துகள், நம்பர், சிம்பல்கள் மற்றும் ஃபங்க்ஷன் கீஸ்களுடன் மொத்தம் 101 கீஸ் கொண்டு ஒரு பிளாட்டான பலகையில் பார்த்துள்ளோம். ஆனால் இந்த கீபோர்டு அப்படி இல்லை! இதனுடைய சைஸே ஒரு சாக்லேட் டப்பா அளவுக்குத் தான் இருக்குது. வாங்க அது என்ன மாறியான கீபோர்டு என்று பார்க்கலாம்.

The Shrimp அல்ட்ரா காம்பெக்ட் கேமிங் கீபோர்ட்

இப்படி ஒரு கீபோர்டு இருக்கிறது என்று டெக் கேட்ஜெட் பிரியர்களுள் ஒரு சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. மற்றப்படி அதிகப்படியான மக்களுக்கு இதனைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த சாதனம் 'தி ஷ்ரிம்ப் அல்ட்ரா காம்பெக்ட் மெக்கானிக்கல் கேமிங் கீபோர்ட்' (The Shrimp ultra-compact mechanical gaming keyboard) என்று அழைக்கப்படுகிறது. நாம் தினசரி பயன்படுத்தும் கீபோர்டின் ஆல்ட்டர்னேட்டிவாக செயல்படும் என்று கூறப்படுகிறது.

யார் தயாரித்தது தெரியுமா?

இந்த வித்தியாசமான கீபோர்டை நோர்டிக் கேம் சப்ளை (NGS) என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் கேமிங்கின் பொழுது லேப்டாப்புடன் இணைந்து பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கிறது. ஸ்டாண்டர்ட் தோற்றமுடைய கீபோர்ட்களில் இருக்கும் எளிமையான செயல்பாட்டை இந்த டிவைஸ் கொண்டுள்ளது. நார்மல் கீபோர்டில் மொத்தம் 101 கீஸ் இருந்தால் இந்த காம்பெக்ட் கேமிங் கீபோர்டில் வெறும் 25 கீஸ்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இந்த கீபோர்டை உங்களுடைய லேப்டாப்பில் இணைந்து பயன்படுத்த எந்தவிதமான சாஃப்ட்வேர் மற்றும் கஷ்டமான இன்ஸ்டால் செட்டப் என்று எதுவும் தேவையில்லை.

தாறுமாறான டிசைன்

இத்தகைய ஷ்ரிம்ப் கீபோர்ட் டிவைஸ் கேடரோன் ஜி ப்ரோ (Gateron G Pro) சுவிட்சுகள் மற்றும் நேர்த்தியான நோர்டிக் (Nordic) டிசைன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக சாதனத்தின் மூலம் வரும் ஒலியைக் குறைக்கும் அம்சமும் இந்த கீபோர்டில் உள்ளது. பயனர்களுக்கு எந்த வித சிரமமும் இன்றி பயன்படுத்த இதில் ரிஸ்ட் ரெஸ்டர் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஈசியாக பிரித்தெடுக்கக் கூடிய மேக்னெட்டிக் அட்டாச் அம்சத்துடனும் வருகிறது. பயனரின் மணிக்கட்டு ஓய்வு கிடைக்க மென்மையான குஷன் கூட வழங்கப்பட்டுள்ளது.

லைட்டிங் கூட இருக்காம்...

இந்த ஷ்ரிம்ப் கீபோர்டில் மேம்பட்ட RGB லைட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் கீஸ் பெரிய எழுத்துக்கள் மற்றும் கிளாசிக் செர்ரி ப்ரொபைலைக் கொண்டுள்ளது. இதனின் உயரம் மற்றும் வடிவமைப்பு பெரும்பாலான டெக்னாலஜி கீபோர்ட்களை விடச் சிறந்த வடிவத்தில் உள்ளது. டெஸ்க்டாப், கேமிங் லேப்டாப், எச்ஐடி-இணக்கமான USB சாதனங்கள் மற்றும் கேம்ஸ் கன்சோல்களுக்கான இணக்கத்துடன் இது வருகிறது. இந்த டிவைஸ் நல்ல வளர்ச்சி அடைந்த பிறகு சந்தையில் விற்பனைக்கு வரும் என்று NGS நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த கூலான கேட்ஜெட் கிடைக்கும் வரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

Shrimp ultra compact mechanical keyboard, shrimp ultra compact mechanical keyboard india, shrimp ultra compact mechanical keyboard review, shrimp ultra compact mechanical keyboard price.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்