இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் வருவதற்கு முன்னதாகவே பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிய அலைக்கற்றை ஆதரவுடன் மொபைல்களை அறிமுகம் செய்தன. அதனைத் தொடர்ந்து பல திறன் வாய்ந்த ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகமாயின. இச்சூழலில், ஜூலை மாதம் களம்காண பல ஸ்மார்ட்போன்கள் தயாராகி வருகின்றன.
இதில் சாம்சங், நத்திங், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் அடங்கும். அந்த வகையில் அடுத்த மாதம் வெளியாக தயாராக இருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
5ஜி தொழில்நுட்பம் அறிமுகமானதைத் தொடர்ந்து பல நிறுவனங்களும் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதம் சிறப்பானதாக இருக்கப் போகிறது. இதற்கு முக்கிய காரணம் முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன. மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நத்திங் போன் (2) வெளியீடு ஜூலை 11ஆம் தேதி உள்ளது.
மேலும் அடுத்தடுத்த வாரங்களில் ஒன்பிளஸ் நார்டு 3, iQOO நியோ 7 ப்ரோ, ரியல்மி நார்சோ 60 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து ஜூலை 7ஆம் தேதி சாம்சங் தனது கேலக்ஸி M34 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. எனவே, மக்கள் என்ன தரத்திலான ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பினாலும், அவர்களுக்கு ஏற்றவாறு நடுத்தரம் முதல் அதிக அம்சங்கள் அடங்கிய பிரீமியம் மொபைல்கள் ஜூலை மாதத்தில் டெக் சந்தையில் கால் பதிக்கின்றன.
ஐக்யூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78” இன்ச் முழு அளவு எச்டி+ சாம்சங் இ5 அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறனுக்காக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரி கொடுக்கபடும். கேமராவைப் பொருத்தவரை 50 மெகாபிக்சல் சாம்சங் GN5 சென்சார் கொண்ட முதன்மை கேமரா இருக்கும் எனவும் இதில் OIS ஆதரவு கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் 5000mAh பேட்டரி, போனுடன் வரும் 120W சார்ஜர் கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.38,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியாகும் புதிய பட்ஜெட் ஒன்பிளஸ் போனில் 1.5k ரெசலியூஷன் கொண்ட 6.74” இன்ச், 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்படும். இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சிப்செட் பயன்படுத்தபட்டுள்ளது. மேலும், 50 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன், 8எம்பி + 2 எம்பி என மூன்று பின்பக்க கேமராக்களும், வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும் கொடுக்கப்படுகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி கொடுக்கப்படும். இதனுடன் சார்ஜர் கொடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனம் முன்னதாகவே கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் 120Hz டிஸ்ப்ளே உடன் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தது. மேலும் இதில் 6000mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் அடங்கிய பின்பக்க டிரிப்பிள் கேமரா ஆகியவை இருக்கும், இந்த கேமராவில் OIS ஆதரவு கிடைக்கும். இதனால் நேர்த்தியான வீடியோக்களை நம்மால் எடுக்க முடியும்.
மேலும் கிடைத்த தகவலின்படி, Samsung Galaxy M34 5G மொபைல் 6.6” இன்ச் முழு அளவு எச்டி+ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இதன் செயல்திறனுக்காக மீடியாடெக் டிமென்சிட்டி 1080 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் விரைவாக சார்ஜ் செய்ய அனுமதிக்கும் 25 வாட்ஸ் ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போனுடன் சார்ஜர் வருமா என்பது சந்தேகம் தான். ரூ.20,000 என்ற பட்ஜெட்டில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் கொடுக்கப்படும். 6.7” இன்ச் அமோலெட் திரை, 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வரலாம். 4,700mAh பேட்டரியுடன், ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கிடைக்கும். மூன்று வருடத்திற்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் கிடைக்கும் என்பதால், நீண்ட கால பயன்பாட்டுக்கு இந்த போன் துணையாக இருக்கும். புதிய நத்திய ஓஎஸ் 2 புதிய பதிப்பு இந்த போனில் இடம்பெறும் என நிறுவனம் வெளியிட்ட தகவலில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பின்பக்கம் இருக்கும் லைட்டுகளில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.
புதிய ரியல்மி நார்சோ சீரிஸ் போனில் 120Hz ரெப்ரெஷ் ரேட், 1080 X 2412 பிக்சல்கள், பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் 6.7-இன்ச் முழுஅளவு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மாலி-ஜி68 ஜிபியுவுடன் இணைந்த மீடியாடெக் டிமென்சிட்டி 7050 சிப்செட் ஃபோனை இயக்குகிறது. ஃபோன் 12ஜிபி ரேம், 1டிபி ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மேலும் அதிகப்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான Realme UI 4.0 ஸ்கின் கொண்டு இயங்குகிறது. பின்புறத்தில் இரட்டை கேமராக்களைக் கொண்டுள்ளது. இதில் எஃப்/1.75 கொண்ட 108எம்பி, OIS, 6P லென்ஸ் கொண்ட கேமராவுடன், 2 மெகாபிக்சல் டூயல் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள், வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 67W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உள்ளது. 5G, 4G LTE, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…