Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

OnePlus வெளியிட்ட மலிவு விலை ஸ்மார்ட்போன் OnePlus 11R பாத்தா உடனே வாங்கிடலாம்

Priyanka Hochumin Updated:
OnePlus வெளியிட்ட மலிவு விலை ஸ்மார்ட்போன் OnePlus 11R பாத்தா உடனே வாங்கிடலாம்Representative Image.

நேற்று நியூ டெல்லியில் நடைபெற்ற OnePlus Cloud 11 Event நிகழ்வில், ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 11R 5G பட்ஜெட் ஸ்மார்ட்போனை (Budget smartphone) அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் பிராண்டில் இந்த மாடல் தான் மிகவும் சக்தி வாய்ந்த மாடலாக திகழும் என்று One Plus நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தங்களுடைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் OnePlus 11 சாதனத்தை 'ஷேப் ஆஃப் பவர்' என்று குறிப்பிட்டு அறிமுகம் செய்துள்ளது.

இந்த பதிவில் பட்ஜெட் போன் ஒன்பிளஸ் 11 ஆர் மாடலின் அம்சங்கள், விலை குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொள்வோம்.

OnePlus வெளியிட்ட மலிவு விலை ஸ்மார்ட்போன் OnePlus 11R பாத்தா உடனே வாங்கிடலாம்Representative Image

OnePlus 11R 5G அம்சங்கள் | OnePlus 11R 5G Specification

இந்த மாடல் ஸ்மார்ட்போன் Adreno GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் OnePlus 11R ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Oxygen OS 13 ஸ்கின் உடன் இயங்குகிறது. இந்த பிராண்ட் ஸ்மார்ட்போன் 16GB வரை LPDDR5 ரேம் மற்றும் 256GB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. அட்டகாசமான அம்சங்களைக் கொண்ட இந்த மாடல் ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அவற்றுள் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். அதே போல செல்பீ மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு முன்புறத்தில் 16MP செல்ஃபி ஸ்னாப்பர் வழங்கப்பட்டுள்ளது.

OnePlus வெளியிட்ட மலிவு விலை ஸ்மார்ட்போன் OnePlus 11R பாத்தா உடனே வாங்கிடலாம்Representative Image

அதிக நேர பயன்பாட்டிற்கு OnePlus 11R ஆனது 100W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் மற்ற சிறப்புக்கள் - Wi-Fi 6E, ப்ளூடூத் 5.2, GPS மற்றும் USB Type-C போர்ட் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அளவு 163.1×74.1×8.53 மிமீ மற்றும் 205 கிராம் எடை கொண்டது. போனின் செக்யூரிட்டி பயன்பாட்டிற்காக இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டால்பி அட்மோஸ் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் பட்டனுடன் வழங்கப்பட்டுள்ளது.

OnePlus வெளியிட்ட மலிவு விலை ஸ்மார்ட்போன் OnePlus 11R பாத்தா உடனே வாங்கிடலாம்Representative Image

சரி இப்போது OnePlus 11R மாடல் எந்த ஸ்டோரேஜ் அம்சங்களுக்கு என்ன விலை என்று பாப்போம். 8GB + 128GB மாடலின் விலை ரூ.39,999/- மற்றும் 16GB + 256GB மாடலின் விலை ரூ. 44,999 மட்டுமே. இந்த மாடல் Sonic Black மற்றும் Galactic Silver ஆகிய 2 நிறங்களில் விற்பனைக்கு வரும். முன்பதிவு வரும் பிப்ரவரி 21, 2023 அன்று முதல் துவங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும் விற்பனையானது பிப்ரவரி 28, 2023 முதல் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த வருடத்தில் வாங்கும் சிறந்த பட்ஜெட் போனாக OnePlus 11R மாடல் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்